உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அராம்கோ, சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரோங்ஷெங் பெட்ரோகெமிக்கல்லில் 10% பங்குகளை 24.6 பில்லியன் யுவான்களுக்கு (3.6 பில்லியன் டாலர்) கொடுத்து வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் O2C பிரிவில் முதலீடு செய்ய பல மாதங்கள் பேச்சு வார்த்தை செய்யப்பட்டது மட்டும் அல்லாமல், ரிலையன்ஸ் நிர்வாகத்தில் saudi aramco உயர் அதிகாரிக்கு இடம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சீனாவில் முதலீடு செய்துள்ளது.
பெரிய ஒப்பந்தம்!
சீன நிறுவனத்தின் அறிக்கையின்படி, கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ரோங்ஷெங் பெட்ரோகெமிக்கல் கோ-வின் (Rongsheng) சுத்திகரிப்பு ஆலைக்கு 20 ஆண்டு காலத்திற்கு சவுதி அரம்கோ ஒரு நாளுக்கு 4,80,000 பேரல் கச்சா எண்ணெயை வழங்கும்.
800 மில்லியன் டாலர் கடன்
அராம்கோ நிறுவனம் Rongsheng நிறுவனத்திற்கு 800 மில்லியன் டாலர்களை கடன் வழங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அராம்கோவின் துணை நிறுவனமான அரம்கோ ஓவர்சீஸ் நிறுவனம் இப்பங்குகளை வாங்கும்.
இரண்டே நாளில் இரண்டாவது பெரிய ஒப்பந்தம்!
ஞாயிற்றுக்கிழமை, Aramco மற்றும் பிற சீன நிறுவனங்களும் சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் 12 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன. அதனையடுத்து நேற்று இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
700,000 பேரல் கச்சா எண்ணெய்
இந்த ஒப்பந்தம் இரண்டு நாட்டிற்கும் இடையேயான இரண்டாவது ஒப்பந்தமாகும், இது சீனாவிற்கான Aramco இன் ஏற்றுமதியை அதிகரிக்கும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 700,000 பேரல்கள் வரை கூடுதல் எண்ணெயை அனுப்புவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டப்பட்டுள்ளன.
அரம்கோ தலைவர் கருத்து!
இந்த ஒப்பந்தங்கள் மூலம் சீனா மற்றும் அரம்கோவின் நீண்ட கால உறவையும் மற்றும் சீன பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் அடிப்படைகள் மீதான நம்பிக்கையை நிரூபிக்கிறது என்று அரம்கோவின் Downstream செயல்பாடுகளின் தலைவர் முகமது அல் கஹ்தானி கூறினார்.
Liaoning சுத்திகரிப்பு ஆலை
Liaoning சுத்திகரிப்பு ஆலையில் Aramco 30% பங்குகளைக் கொண்டுள்ளது. அரம்கோ நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சுமார் 7 பில்லியன் டாலருக்கு அதிகமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி!
இந்த ஒப்பந்தங்கள் மூலம் சீனா கோவிட்-19 காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை சீர் செய்யவும், நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
சீன அதிபரின் மாஸ்டர் பிளான்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த டிசம்பர் மாதம் முதலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மிகப்பெரிய ஒப்பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக சீன யுவான் நாணயத்தின் மூலம் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளவும் இவர் பிற நாட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் உலகளாவிய டாலரின் ஆதிக்கத்தை இது பலவீனமடையச் செய்யும்.


Click it and Unblock the Notifications