சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சவுதி அரேபியா மத்தியிலான வர்த்தகம் மற்றும் நடப்புறவு பல தாசாப்தங்களாக இருக்கிறது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியா-வை இந்தியா அதிகம் நம்பியுள்ளது.
சமீபத்தில் சவுதி தனது பொருளாதாரத்தைக் கச்சா எண்ணெய் மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவு செய்த காரணத்தால் இந்தியா- சவுதி அரேபியா மத்தியிலான வர்த்தக வாய்ப்பு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.
சவுதி அரேபியா
இந்த முக்கியமான காலகட்டத்தில் சவுதி அரேபியா-வின் ஆஸ்தான மற்றும் சக்தி வாய்ந்த தலைவராகவும், அந்நாட்டின் இளவரசராகவும் இருக்கும் முகமது பின் சல்மான் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர் சவுதி அரசு பயணத்தில் முகமது பின் சல்மான்-க்கு இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் ஜி20 மாநாட்டிற்கான பயணத்தின் போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் முகமது பின் சல்மான்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்தச் சந்திப்பு நடந்தால் இரு நாடுகள் மத்தியிலான எரிசக்தி, முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் கூட்டுறவு மேம்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் 4வது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாகச் சவுதி அரேபியா விளங்குகிறது, இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்-யில் 18 சதவீதம் சவுதியில் இருந்து வருகிறது. கடந்த 9 மாதத்தில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 29.28 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியல் பிரச்சனைகள்
மேலும் தற்போது சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியா கச்சா எண்ணெய்க்காகச் சவுதி அரேபியாவை அதிகளவில் நம்பியுள்ளது. இதேவேளையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் தடை விதித்து வரும் நிலையில், இந்தியா போல் சவுதி அரேபியாவும் எவ்விதமான தடையும் விதிக்கவில்லை.
முதலீட்டு வாய்ப்புகள்
செப்டம்பர் மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கரின், சவுதி அரேபியாவின் ரியாத் நகரப் பயணத்தின் போது, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவில் இருக்கும் சவுதி அரேபியா நாட்டுக்கான முதலீட்டு வாய்ப்புகளை முன்வைக்கப்பட்டது.
முக்கியத் துறைகள்
தற்போது இருநாடுகளும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் கூட்டணி முயற்சிகளை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா சவுதி அரேபியாவுக்குச் சுமார் 6.63 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது, இறக்குமதி அளவு 22.65 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications