வளைகுடா நாடுகளில் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போரைத் தாண்டி, சவுதி அரேபியா - ஹவுதி படைகள் - யெமன் நாட்டின் ராணுவம் மத்தியிலான போர் மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு உடனான மத்தியஸ்தம் வாயிலாக இஸ்ரேல் ராணுவம் சவுதி அரேபியா உடன் இணைந்து யெமன் நாட்டில் இருக்கும் ஹவுதி படைகள் மீது தாக்குதல் நடத்த முன்வந்துள்ளதாக Haaretz பத்திரிக்கை மூத்த அரசு அதிகாரி கொடுத்த தகவலை வெளியிட்டு உள்ளது.

சவுதி அரேபியா - ஹவுதி மத்தியிலான போரில் அமெரிக்கா பங்கு பெற யோசிக்கும் நிலையில், இஸ்ரேல் ஆர்வம் காட்டுவது வளைகுடா நாடுகள் உடனான நடப்புறவை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாகப் பார்க்கிறது. ஆனால் இஸ்ரேலின் கோரிக்கைக்குச் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உடன் இணைந்தால் சக வளைகுடா நாடுகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என சவுதி தரப்பில் விளக்கம் கொடுத்து இஸ்ரேலின் உதவியை மறுத்துள்ளது.
இந்த ஒரு உதவியின் வாயிலாகச் சவுதி அரேபியா - இஸ்ரேல் மத்தியிலான நட்புறவு, வர்த்தக உறவு, எதிர்காலத்தில் மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் அரசு தீவிரமாக நம்புகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சவுதி - இஸ்ரேல் மத்தியிலான நார்மலைசேஷன் கொண்டு வரப் பரிந்துரைத்து வரும் வேளையில் ஹவுதியை வைத்து சவுதி உடன் இணக்கம் காட்ட இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
மேலும் அமெரிக்க அரசு ஈரான் போருக்குப் பின்பு வளைகுடாவில் சவுதி + இஸ்ரேல் கூட்டணி பெரும் சக்தியாகவும் அதிகாரம் மிக்க கூட்டணியாக மாற்றவும் மறைந்த செனேட்டர் லிண்ட்சே கிரஹாம் தலைமையில் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வளைகுடா நாடுகள் இஸ்ரேல் உடன் நட்புறவு காட்ட வேண்டுமாயின் இஸ்ரேல் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும், இதன் பின்பு தான் அனைத்தும் நடக்கும் எனச் சவுதி அரேபியா நிலைப்பாட்டைக் கொண்டு உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நடந்து வந்தாலும், அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின் ஈரான் பெரும் தாக்குதலை நடத்தத் தயாராக இருக்கும் வேளையில் அமெரிக்கா - இஸ்ரேல் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் அடுத்த தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தீவிரமாக ஆலோசனை செய்து திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications

