ரஷ்யா - உக்ரைன் போரைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் தான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதித்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 131 டாலரை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியா உடன் அமெரிக்க மிகவும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்த கதையை மாற்றியுள்ளது சவுதி அரேபியா..
முகமது பின் சல்மான்
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவின் Shale மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடத்திய மிக முக்கியமான மற்றும் அவசியமான ஆலோசனைக் கூட்டத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்தும், 2014-2016 எண்ணெய் விலை போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளது.
OPEC+ நாடுகள்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த போது உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்த நிலையில், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் OPEC+ ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவதாகவும், எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையில் அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் அறிவித்து ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்றார். இதையே தான் அனைத்து OPEC நாடுகளும் செய்தது.
ரஷ்யா - உக்ரைன் போர்
இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் விலை 132 டாவர் வரையில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சவுதி அரேபியா-விடம் உற்பத்தியை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது.
400000 பேரல் மட்டும்
ஆனால் சவுதி எவ்விதமான கூடுதல் உற்பத்தியும் செய்ய முடியாது, ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 400000 பேரல் கூடுதல் எண்ணெய் மட்டுமே உயர்த்த முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை போர்
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கா 2014-2016ல் உருவாக்கிய கச்சா எண்ணெய் விலை போர் தான். 2014 இறுதியில் அமெரிக்காவின் Shale அதிகப்படியான கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்து OPEC நாடுகளின் வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு. பல முறை விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்கா கேட்கவில்லை.
அமெரிக்கா - OPEC
இதனால் OPEC நாடுகள் அமெரிக்காவின் வர்த்தகத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான கச்சா எண்ணெய்-யை உற்பத்தி செய்து விலை பெரிய அளவில் குறைந்தது. இந்தப் போட்டியில் சவுதி அரேபியா மற்றும் OPEC நாடுகள் வெற்றிபெற்றாலும் பல வருடங்களாக வளைகுடா நாடுகள் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
OPEC ஆலோசனைக் கூட்டம்
இதனாலேயே OPEC+ அமைப்பில் இருக்கும் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி கூடுதல் உற்பத்திக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் கடந்த வாரம் புதன்கிழமை நடந்த OPEC ஆலோசனைக் கூட்டம் வெறும் 13 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.
கண்டுகொள்ளவில்லை
இந்தக் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான சில நாடுகள் ரஷ்யா - உக்ரைன் போர் பிரச்சனை குறித்தும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து பேசும் போது பெரிதாகக் கண்டுகொள்ளாமல் ஆலோசனையைத் திசை மாற்றியது.
சீனா மற்றும் ரஷ்யா
2014-2016ல் அமெரிக்கா உருவாக்கிய கச்சா எண்ணெய் விலை போருக்குப் பின் சவுதி அரேபியா உட்பட அனைத்து OPEC நாடுகளும் அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதைக் குறைத்துவிட்டு சீனா மற்றும் ரஷ்யா உடன் கைகோர்த்து தனது வர்த்தகம் மற்றும் ஆதரவுகளைப் பெற்று வருகிறது.
இந்தியா
சரியான நேரத்தில் சரியான பதிலடியைச் சவுதி அரேபியா அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது. ஆனால் மறைமுகமாகக் கச்சா எண்ணெய் உயர்வு மூலம் பாதிக்கப்படுவது இந்தியா தான்.
ஒருபேரால் கச்சா எண்ணெய் விலை 135 டாலர் என்றால் கட்டாயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறைந்தது 25 ரூபாய் உயரும்...
More From GoodReturns

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications