டாடா சன்ஸ் குழுமத்தின் முழு நிதிப் பொறுப்புக்களையும் சௌரப் அகர்வாலிடம் ஒப்படைத்துள்ளது. யார் இந்த சௌரப் அகர்வால்?
அவரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை டாடா சன்ஸ் குழுமன் ஏன் ஒப்படைத்து? என்பதைக் குறித்து இனி விரிவாகக் காணலாம்
டாடா சன்ஸ் – தலைமை நிதி அதிகாரி!
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி தான் (Chief Financial Officer - CFO) சௌரப் அகர்வால். இவர் 2017 ஆம் ஆண்டு முதலே டாடா சன்ஸ் குழுமத்தில் CFO- வாக உள்ளார். இவர்தான் டாடா சன்ஸ் குழுமத்தின் ரூ.14,00,000 கோடி நிதியை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார்.
யார் இந்த சௌரப் அகர்வால்!
டாடா குழுவின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் சௌரப் அகர்வால் இரண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதிலும், ஒப்பந்தகளை முடிப்பதிலும் கைதேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக முதலீட்டு வங்கிகளில் பெரும் அனுபவம் உடையவர். இவர் ஒரு ஏஸ் டீல் மேக்கரும் ஆவார்.
ஆதித்யா பிர்லா குரூப்பின் தலைவர்!
இவர் டாடா சன்ஸ் குழுமத்தில் பணிக்கு சேரும்முன் ஆதித்யா பிர்லா குரூப்பின் கார்ப்பரேட் ஸ்ட்ரடஜி தலைவராகவும் (head of corporate strategy) இருந்துள்ளார்.
ஏஸ் டீல் மேக்கர் (Ace Deal maker)
சௌரப் அகர்வால் இந்தியாவின் மிகப்பெரிய M&A (merger and acquisition) ஒப்பந்தமான வோடஃபோன் மற்றும் ஐடியாவின் 21 பில்லியன் இணைப்பிற்கான ஒப்பந்ததை முன்னெடுத்தவர் ஆவார்.
அதுமட்டுமின்றி அல்ட்ரா டெக் சிமெண்ட் மூலம் ஜெய்பீ குழுமத்தின் சிமெண்ட் சொத்துக்களை கையகப்படுத்தியதில் முக்கிய நபராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் Aditya Birla Nuvo Ltd மற்றும் Grasim நிறுவனங்களை மறுசீரமைத்ததிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
பிரபல வங்கிகளின் தலைவர்!
சௌரப் அகர்வால் அவர்கள் முன்னதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் (tandard Chartered Bank) தெற்காசியாவின் கார்ப்பரேட் பைனான்ஸின் ரீஜினல் தலைவராகவும் DSP Merrill Lynch வங்கியில் முதலீட்டு வங்கி தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
வருடாந்திர வருமானம்!
2022 ஆம் நிதியாண்டின்படி சௌரப் அகர்வாலின் வருடாந்திர காம்பன்சேஷன்(Annual compensation) 21 சதவீதம் உயர்ந்து ரூ.26 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வருடம் இவரின் Annual compensation ரூ.21.45 கோடியாக இருந்தது.
ஐஐஎம் மற்றும் ஐஐடியின் முன்னாள் மாணவர்!
சௌரப் அகர்வால் இந்தியாவின் புகழ்பெற்ற IIT (Indian Institute of Technology) இல் கெமிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதன்பின் கல்கத்தாவில் உள்ள IIM (Indian Institute of Management) இல் மேலாண்மை கல்வியும் பயின்றுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications