இந்திய கிரிக்கெட் அணியை வெளிநாட்டில் வெற்றிகளை குவிக்க பல முக்கிய மாற்றங்களையும், ஸ்ட்ராடஜிகளையும் வகுத்த இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பற்றி நாள் முழுவதும் பேச பல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய மகள் சனா கங்குலி தான் இப்போ டிரென்டிங்.
சமீபத்தில் சனா கங்குலி-யின் டான்ஸ் வீடியோ வைரலான நிலையில், இவர் பிரபலமான சில பிராண்ட் விளம்பரத்தில் கூட சவுரவ் கங்குலியுடன் இணைந்து நடித்துள்ளார்.
சிறு பெண்ணாக இருந்த சனா இப்போது கல்லூரி படிப்பை முடித்து, பல லட்சம் சம்பளம் பெற்று, பிரபல நிதி நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம்.
சனா பள்ளிப் படிப்பு!
சனா கங்குலி கொல்கத்தாவில் உள்ள லொரேட்டோ ஹவுஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் பட்டப்படிப்பைத் தொடர லண்டன் சென்று, அங்குள்ள லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) பொருளாதாரத்தில் படித்து வருகிறார்.
லிங்க்ட்-இன் விவரம்!
சனா கங்குலியின் LinkedIn ப்ரொபைல் படி, அவர் தற்போது ஜூன் 2022 முதல் PwC என்னும் மாபெரும் நிறுவனத்தில் இன்டர்ன் ஆக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். PwC என்பது உலகின் மிகப்பெரிய நிதி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 152 நாடுகளுக்கு மேல் உள்ளது. தற்சமயம் இந்த நிறுவனத்தில் 3.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
முக்கிய பணிகள்
சனா தனது படிப்புடன் Enactus UCL நிறுவனத்தில் முழுநேர வேலை செய்துள்ளார். மேலும் HSBC, KPMG, Goldman Sachs, Barclays மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களுடனும் பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இளம் தொழில்முனைவோர்
Enactus UCL நிறுவனம் இளம் தொழில்முனைவோர் மற்றும் பெரிய கார்ப்பரேட்கள் தங்கள் சொந்த சமூக நிறுவனங்களை உருவாக்க போதுமான ஐடியாக்கள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு தேவையான மார்க்கெட்டிங் தரவுகளையும் வழங்கும் நிறுவனமாகும்.
30 லட்சம் சம்பளம்!
PwC நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பிற்கு அதிக சம்பளம் கொடுக்கிறது. UK.indeed.com என்ற இணையதளத்தின்படி, PwC-யில் இன்டர்ன்ஷிப்பின் போது மாணவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 30 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சனாவும் ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெறுவார் எனக் கருதலாம்.
ஒடிசி நடனக் கலைஞர்!
சனா கங்குலி அவரது தாயார் டோனா கங்குலியைப் போலவே, ஒடிசி நடனக் கலைஞராகப் பயிற்சி பெற்றவர். மேலும் கௌசிகி சக்ரவர்த்தி என்பவரிடம் பாரம்பரிய இசையிலும் சனா பயிற்சி பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவ பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது முழு நேர மாடலாக உள்ளார் சாரா டெண்டுல்கர். இந்திய நடிகைகளான தானியா ஷ்ராஃப் மற்றும் பபிதா சந்து ஆகியோருடன் செல்ஃப்-போர்ட்ரெய்ட் என்ற உயர்தர ஆடை பிராண்டில் அறிமுகமாகி தனது மாடலிங் பணியை தொடர்ந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.


Click it and Unblock the Notifications