நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் மனைவி, தங்கை, அக்கா, அம்மா ஆகியோரில் யாரையாவது இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களோடு இணைந்து வீட்டுக் கடனைப் பெறுவது குறைந்த வட்டி விகிதங்கள் முதல் வரிச் சேமிப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது. இதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? எப்படி சேமிப்பை அதிகரிப்பது? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
வீட்டுக் கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள்: ஒரு பெண் இணை விண்ணப்பதாரருடன் இணைந்து நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.

உதாரணமாக உங்கள் மனைவி, தாயார் அல்லது சகோதரி என யாராக இருந்தாலும் பெண் இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பிக்கும்போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள். ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.05% குறைவாக இருக்கும். அதாவது ஆண்களை விட 5 அடிப்படை புள்ளிகள் குறைவாகப் பெறலாம்.
இது என்ன அவ்வளவு பெரிய தாக்கத்தையா ஏற்படுத்தப் போகிறது. இந்த சிறிய வட்டி வித்தியாசத்தினால் என்ன நடக்கும்? என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த சிறிய வித்தியாசம் உங்கள் மாதாந்திர EMI கட்டணங்களை வெகுவாகக் குறைக்கும். இந்த நன்மையைப் பெற, பெண் சொத்தின் இணை உரிமையாளராக இருக்க வேண்டும்.
ரூ.7 லட்சம் வரையிலான வரி சேமிப்பு: ஜாயிண்ட் ஹோம் லோன்கள் பெறும்போது, கடன் வாங்குபவர்கள் இருவரும் தனித்தனி வருமான வரிச் சலுகைகளைப் பெற முடியும். ஆனால் அதற்கு விண்ணப்பதாரர் இருவரும் சொத்தின் இணை உரிமையாளர்களாக இருக்க வேண்டும்.
எனவே ஜாயிண்ட் ஹோம் லோன்களை பெறும்போது விண்ணப்பதாரர் தங்கள் மனைவி அல்லது அக்கா, தங்கை, அம்மா என பெண் விண்ணப்பதாரருடன் கடன் பெறும்போது வரி விலக்குகளை இரட்டிப்பாக்கலாம். கடன் பெறுபவர் ஒவ்வொருவரும் பிரிவு 80C-இன் கீழ் அசல் திருப்பிச் செலுத்துதலில் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். இதன் மூலம் மொத்தம் ரூ. 3 லட்சம் வரை சேமிக்கலாம்.
கூடுதலாக, பிரிவு 24-இன் கீழ் செலுத்தப்படும் ரூ.4 லட்சம் வட்டியில் இருவரும் தலா ரூ.2 லட்சம் வரை விலக்கு கோரலாம். மொத்தத்தில் ரூ. 7 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம்.
எளிதான கடன் ஒப்புதல் செயல்முறை: உங்களிடம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஜாயிண்ட் ஹோம் லோன்களை பெறும் போது கடன் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
உங்கள் மனைவி அல்லது அக்கா தங்கை ஆகியோரை இணை விண்ணப்பதாரராக சேர்ப்பதன் மூலம் கடன் வழங்குபவர் உங்கள் இரண்டு பேரின் வருமானத்தையும் கருத்தில் கொள்வார். இதனால் கடன் தகுதி அதிகரித்து கடன் பெறுவதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவாகும்.
நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, உங்கள் இணை விண்ணப்பதாரரின் கடன் மற்றும் வருமான விகிதம் 50-60% வரம்பிற்குள் இருப்பதை உறுதிசெய்யவும்.
உங்கள் மனைவியுடன் இணைந்து வீட்டுக் கடனைப் பெறுவது EMI-களின் நிதிச் சுமையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வரிச் சலுகைகளையும் வழங்குகிறது, இது வீடு வாங்கத் திட்டமிடும் தம்பதிகளுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications