சென்னை: நிறைய பேர் தங்கள் ஓய்வூதிய சேமிப்புக்காக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்கிறார்கள். NPS-இன் வரிச் சலுகைகள், பழைய மற்றும் புதிய வரி முறைகள் இரண்டிலும் கிடைக்கும். பழைய வரி முறையின் கீழ், வருமான வரிச் சட்டம், 1961இன் படி மூன்று பிரிவுகளின் மூலம் NPS திட்டத்தின் வரிச் சலுகைகள் கிடைக்கிறது.
நீங்கள் பழைய அல்லது புதிய வரி விதிப்பின் கீழ் எதைப் பயன்படுத்தினாலும், வருமான வரிச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் NPS திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்றும், வரிச் சலுகைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய வரி முறையின் கீழ் NPS முதலீடு: இந்த ஆண்டு புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80CCD (2)-இன் கீழ், NPS திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை (taxable income) குறைக்க முடியும். இந்த நடைமுறை முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் NPS கணக்குகளுக்கு பங்களிப்பு செய்யும்போது பொருந்தும். ஏனெனில் இந்த பங்களிப்புகள் ஊழியர்களின் மொத்த ஊதியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் மொத்த சம்பளத்தின் அளவைக் குறைக்கிறது.
டிடக்க்ஷன் கிளைம்: டிடக்க்ஷன் கிளைம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை வரி கணக்கில் இருந்து குறைப்பதற்கான உரிமையாகும். இது வரி செலுத்துபவரின் மொத்த வரிக்கடனை குறைப்பதற்கு உதவுகிறது. மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் 14% வரை அரசாங்கத்தால் செய்யப்படும் NPS பங்களிப்புகளுக்குக் டிடக்க்ஷன் கிளைம் பெற முடியும்.
உதாரணமாக, ஒரு ஊழியர் தனது சம்பளத்தின் 10% அல்லது 14% வரை, அவரின் பணியிடத்தைப் பொறுத்து NPS பங்களிப்புகளை செய்யும்போது, குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
NPS திட்டத்தின் கீழ், ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான பங்களிப்புகள் ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சத்தை தாண்டினால், ஊழியர்களுக்கு வரி விதிக்கப்படும். கூடுதலாக, அதிகப்படியான பங்களிப்பிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும்.
புதிய வரி முறையை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. கூடுதலாக, புதிய வரி முறையின் கீழ் சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அதிகம் உதவுகிறது. மேலும், பிரிவு 87A இன் கீழ் வரி விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய வரி முறையின் கீழ் NPS முதலீடு: வருமான வரிச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் NPS இல் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு அவர்களின் மொத்த சம்பளத்தில் இருந்து விலக்குகளைப் பெறுவதற்கான உரிமையை பழைய வரி விதி வழங்குகிறது. பிரிவு 80CCD (1) மற்றும் பிரிவு 80CCD(1B) ஆகியவற்றின் கீழ் விலக்குகளைப் பெறலாம்.
மொத்த விலக்கு: பழைய வரி முறையின் கீழ், தனிநபர்கள் வருமான வரிச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக ரூ. 9.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். இதில் பிரிவு 80CCD (1) இன் கீழ் ரூ. 1.5 லட்சம், பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000, மற்றும் பிரிவு 80CCD (2)-ன் கீழ் ரூ. 7.5 லட்சம் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications