அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பைக் காட்டிலும் அதிகமாக சொத்து சேர்த்து ஐந்து மாதங்கள் கழித்து மற்றொரு பணக்காரரான ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனர் ஷவ் நாடாரை முந்தியுள்ளார் சாவித்திரி ஜிண்டால். இவர் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி ஆவார்.
37.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நாட்டின் மூன்றாவது பெரும் பணக்காரராக சாவித்திரி ஜிண்டால் உள்ளார். அவருக்கு முன்பாக முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் உள்ளனர். புளூம்பெர்க் இதழின்படி ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 30.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இவருக்கும் சாவித்திரி ஜிண்டாலுக்கும் உள்ள வேறுபாடு 6.5 பில்லியன் டாலர்கள் ஆகும். 2024இல் சாவித்திரி ஜிண்டாலின் நிகர மதிப்பு 6.8 பில்லியன் டாலர்கள் அதிகரித்தன. 2023இல் 11 பில்லியன் டாலர்கள் அதிகரித்தன.
ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, ஜேஎஸ்டபிள்யூ இன்ப்ராஸ்ட்ரக்சர் பங்குகளின் விலை உயர்வால் சொத்து மதிப்பில் உயர்வு ஏற்பட்டது. இந்த மூன்று நிறுவனங்கள் சேர்ந்து 56 சதவீத சொத்தை சாவித்திரி ஜிண்டாலுக்கு வழங்கியுள்ளன.
ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் பங்குகள் கடந்த 6 மாதங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ இன்ப்ராஸ்ட்ரக்சர் பங்கு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஜிண்டாலின் மதிப்பில் 23 சதவீதப் பங்கை அளிக்கிறது. கடந்த 6 மாதங்களில் 13 சதவீத வருவாயை தந்துள்ளது.
மறுபுறத்தில் ஷிவ்நாடார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 2.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது. நாட்டின் மூன்றாவது பெரிய சாப்ட்வேர் கம்பெனியான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்ஸின் பங்குகள் 21 சதவீதம் குறைந்துள்ளது.
ஷிவ் நாடாரின் நிகர மதிப்பில் இதுவரை ஏற்பட்ட சரிவு, நாட்டின் பெரிய கோடீஸ்வர்களில் மிக அதிகமாக இருந்தது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, முகேஷ் அம்பானி 108.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கௌதம் அதானி 99.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மே 14, 2024 நிலவரப்படி டாடா குழும நிறுவனங்களின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவரான ஷாபூர் பல்லோன்ஜி மிஸ்திரியின் நிகர மதிப்பு $37.54 பில்லியன் ஆகும்.


Click it and Unblock the Notifications