எஸ்பிஐ வங்கியின் புதிய 3 இன் 1 அக்கவுன்ட்.. பங்குச்சந்தை முதலீட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து புதிய சேவைகளை அளிக்க வேண்டும் என்றும், தனியார் வங்கிகளின் ஆதிக்கத்தையும் வர்த்தகத்தையும் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து சேவைகளின் தரத்தையும், சேவைகளின் எண்ணிக்கையையும் மேம்படுத்தி வருகிறது.

இதன் ஒருபடியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 3 இன் 1 அக்கவுன்ட் சேவையை அறிமுகம் செய்து உள்ளது.

 3 இன் 1 அக்கவுன்ட்

3 இன் 1 அக்கவுன்ட்

பெயருக்கு ஏற்ப சேமிப்பு கணக்கு, டிமேட் கணக்கு, வர்த்தக கணக்கு ஆகிய 3-யும் ஓரே பேக்கேஜ் ஆக எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது எஸ்பிஐ, இது மட்டும் அல்லாமல் இந்த முக்கியமான சேவையை டிஜிட்டல் முறையில் அளிக்க உள்ளது எஸ்பிஐ.

  பங்குச்சந்தை முதலீடு

பங்குச்சந்தை முதலீடு

நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் டிமேட் மற்றும் வர்த்தக கணக்கு வேண்டும், மேலும் வர்த்தக கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும், வர்த்தக கணக்கில் இருந்து பணத்தை வித்டிரா செய்யவும் சேமிப்பு கணக்கு வேண்டும்.

 எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

இந்த மூன்றும் ஓரே தளத்தில் இருந்தால் வர்த்தக பரிமாற்றம் வேகமாகச் செய்ய முடியும் என்பதால் இப்புதிய 3 இன் 1 சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. சரி இந்த கணக்கை திறக்க தேவையான ஆவணங்கள் மற்றும் இதர விபரத்தை இப்போது பார்ப்போம்.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்


பான் எண் அல்லது படிவம் 60
புகைப்படம்

கீழே உள்ள அதிகாரப்பூர்வமாகச் செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்று (OVD)

 

பாஸ்போர்ட்
ஆதார் நகல்
ஓட்டுனர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
MNREGA வழங்கிய வேலை அட்டை
பெயர் மற்றும் முகவரியின் விவரங்களைக் கொண்ட தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம்.

 

எஸ்பிஐ டிமேட் & டிரேடிங் கணக்கு: தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஒன்று)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
ஒரு ரத்து செய்யப்பட்ட காசோலை / சமீபத்திய வங்கி அறிக்கை

 

 ஈமார்ஜின் சேவை

ஈமார்ஜின் சேவை

3 இன் 1 அக்கவுன்ட் கீழ் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஈமார்ஜின் சேவையை அளிக்கிறது. இதன் மூலம் ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளர் 25 சதவீதம் வரையில் குறைவான மார்ஜின் உடன் வர்த்தகம் செய்ய முடியும். 30 நாட்களுக்கு கேரி பார்வோர்டு பொசிஷன்-ஐ பெற முடியும். மேலும் வாடிக்கையாளர் உரிய நாட்களுக்குள் டெலிவரியை டீமேட் கணக்கிற்குள் சேர்க்கலாம் அல்லது ஸ்கொயர் ஆப் செய்துகொள்ளவும் முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+