எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இந்த செய்தி உங்களுக்கு தான்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக ஆர்பிஐ வட்டி விகிதத்தில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

எனினும் ரிசர்வ் வங்கி இப்படி அறிவிப்பை கொடுத்துள்ள இந்த நிலையில், நாட்டின் முக்கிய முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வட்டி குறைப்பானது எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து கடன்களுக்குமான, குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது நடப்பு 8 சதவிகிதத்திலிருந்து 7.90 சதவிகிதமாக குறைத்துள்ளதாகவும், இது டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 8 முறையாக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

வாடிக்கையாளர்கள் வரவேற்பு

வாடிக்கையாளர்கள் வரவேற்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்தா தாஸ், கடந்த வியாழக்கிழமையன்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, வட்டி குறைப்புக்கு தற்போது எந்தவித அவசரமும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பு செய்த வட்டி குறைப்பு எவ்வாறு செயல்பட போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்.பி.ஐ வட்டியை குறைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத மாதம் செலுத்தும் இ.எம்.ஐ குறையும்

மாத மாதம் செலுத்தும் இ.எம்.ஐ குறையும்

இந்த வட்டி விகித குறைப்பினால், இனி மாத மாதம் இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்கள் பெரும் பயனடைவார்கள். ஏனெனில் பேஸ்ரேட் முறையில் கடன் பெற்றவர்கள் செலுத்தி வரும், அதிக்கப்படியான இஎம்ஐ தொகை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பானது அனைத்து கடன்களுக்கும் பொருந்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் வாகனக் கடன், வீட்டுக்கடன் என பல வகையான கடன்களுக்கு வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு வட்டியில் மாற்றம் இல்லை

சேமிப்பு வட்டியில் மாற்றம் இல்லை

கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்திருந்தாலும், சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு நாட்டின் மத்திய வங்கியே வட்டி குறைப்பு செய்யாத போது, நாட்டின் முதன்மை வங்கி வட்டி குறைப்பை செய்வது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். அதிலும் நாட்டில் தற்போது நிலவி வரும் மந்த நிலையில் வெகுவாக கைகொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+