எஸ்பிஐ-ன் கிராம சேவா திட்டம்.. 6 மாநிலங்களில் விரிவாக்கம்.. தமிழகத்திற்கு பலன் உண்டா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) 4 வது கட்டமாக 6 மாநிலங்களில் கிராம சேவை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 30 கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ அறக்கட்டளையின் மூலம் ஹரியானா, குஜராத், மகராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமங்கள் இதில் அடங்கும் என அறிவித்துள்ளது.

விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா எடுத்த முடிவு.. மாணவர்கள் கதறல்..! விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா எடுத்த முடிவு.. மாணவர்கள் கதறல்..!

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

இவ்வங்கியின் கார்ப்பரேட் சமூக பொறுப்பின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வளர்ச்சிக்கு இந்த அறக்கட்டளையானது உதவி வருகின்றது.

இது தற்போது 16 மாநிலங்களில் 100 கிராமங்களை முதல் மூன்று கட்டங்களாக தேர்தெடுத்துள்ளது.

4வது கட்டம்

4வது கட்டம்

இந்த நிலையில் தான் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி அன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 4 வது கட்டமாக 6 மாநிலங்களில் கிராம சேவை திட்டங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேற்கொண்டு 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளது.

எஸ்பிஐ-ன் கருத்து

எஸ்பிஐ-ன் கருத்து

இது குறித்து எஸ்பிஐ அறக்கட்டளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ தொடர்ந்து இந்தியாவின் வலுவான வளர்ச்சி தனது முக்கிய பங்களிப்பினை செய்து வருகின்றது. இதன் மூலம் கிராமங்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எஸ்பிஐயின் இந்த முயற்சி குறித்து நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். நமது கூட்டு முயற்சியானது மகாத்மா காந்தியின் கிராம ஸ்வராஜ் கனவை நனவாக்க பயன்படும் என எஸ்பிஐ தலைவர் ஸ்ரீ தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி மேம்படும்

வளர்ச்சி மேம்படும்

இதே எஸ்பிஐ அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீ சஞ்சய் பிரகாஷ், எஸ்பிஐ கிராம சேவா திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கி 5 வருடங்கள் ஆகிவிட்டது. இது இன்னும் விரிவாக்கம் செய்யப்படும். இது கிராமப்புற மக்களின் வளர்ச்சியினை உறுதிபடுத்தும் என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI announced Gram Seva Program across 6 states of india

State Bank of India has introduced Gram Seva Schemes in 6 states in the 4th phase.
Story first published: Monday, October 3, 2022, 18:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X