ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) செப்டம்பர் காலாண்டு முடிவினை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியான நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 74% அதிகரித்து, 13,265 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டு லாபம் 12.82% அதிகரித்து, 21,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 12.83% அதிகரித்து, 35,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 31,184 கோடி ரூபாயாக இருந்தது. இதே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31,196 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டெபாசிட் விகிதம்
செப்டம்பர் காலாண்டு முடிவில் இதன் டெபாசிட் விகிதம் 41,90,255 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 10% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 38,09,630 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் மொத்த அட்வான்ஸ் தொகையானது 30,35,071 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 25,30,777 கோடி ரூபாயாக இருந்தது. இதே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 29,00,636 கோடி ரூபாயாக இருந்தது. எஸ்பிஐ-யின் மொத்த அட்வான்ஸ் கடந்த காலாண்டினை காட்டிலும் 4.63% அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ கடன்
எஸ்பிஐ கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.93% அறிவித்துள்ளது. உள்நாட்டு அட்வான்ஸ் தொகையானது 18.15% அதிகரித்துள்ளது. இதே முன்னணி வணிக வங்கியான வெளிநாட்டு அலுவலகங்களின் அட்வான்ஸ் வளர்ச்சியானது 30.14% அதிகரித்துள்ளது.
விவசாய கடன் & எஸ் எம் இ
எஸ் எம் இ மற்றும் விவசாய லோன் கடன் வளர்ச்சியானது, முறையே 13.24% மற்றும் 11% வளர்ச்சியானது ஏற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் லோன் கடன் வளர்ச்சியானது, 14 - 16% அதிகரித்துள்ளது.
வாரக்கடன் சரிவு
எஸ்பிஐ வங்கியின் மொத்த கடன் புத்தகத்தில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 3.52% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.90% ஆக இருந்தது. ஆக கடந்த ஆண்டினை காட்டிலும் வாரக்கடன் விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.
கடன் வளர்ச்சி
கொரோனாவின் வருகைக்கு பிறகு வங்கி துறைகளானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. மக்களின் தேவை அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சியும் அதிகரித்து வருகின்றது. தற்போது சர்வதேச நாடுகள் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியாவில் பெரியளவில் தாக்கம் இல்லை. இதன் காரணமாக டெபாசிட் விகிதங்கள் அதிரிக்கலாம். இது வங்கிகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம்.
பங்கு விலை நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.55% அதிகரித்து, 593.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 596.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 580.40 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.53% அதிகரித்து, 593.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 596.75 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 580.60 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 596.75 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 269.55 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications