இந்தியாவின் முன்னணி வங்கிச் சேவை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அம்ரித் விரிஸ்தி (Amrit Vrishti) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அம்ரித்ரி விரிஸ்தி திட்டம் 444 நாட்களுக்கான டெபாசிட் திட்டமாகும். ஜூன் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து லாபம் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ஒருவர் செய்யும் முதலீட்டு தொகை 444 நாட்களுக்கான டெபாசிட்டாக அவரது கணக்கில் இருக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி வழங்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0. 50 சதவீதம் வட்டிவிகிதம் கிடைக்கும். அதாவது மூத்த குடிமக்கள் தாங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஆண்டுக்கு 7.75% வட்டி வருமானத்தை பெறுவார்கள்.
முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிக வட்டி வருமானம் கொடுக்கக்கூடிய இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கி கிளைகளுக்கு சென்று அம்ரித் விரிஸ்தி திட்டத்தில் முதலீடு செய்யலாம் அல்லது யோனோ எஸ்பிஐ, யோனோ லைட் போன்ற மொபைல் செயலிகள் வழியாகவும் டெபாசிட் செய்யலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் அதிக வட்டி கிடைக்கும் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தவரை நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 444 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு 1,09,133 ரூபாயாக முதிர்வு தொகை கிடைக்கும். ஒரு வேலை நீங்கள் மூத்த குடிமக்களாக இருந்தால் 1,09787 ருபாய் கிடைக்கும்.
பொதுவாக பிரபல வங்கிகள் தங்களின் டெபாசிட் திட்டங்களுக்கு அதிகபட்ச வட்டி வருவாயை வழங்குவதில்லை ஆனால் அவ்வப்போது இதுபோன்ற பிரத்தியேக திட்டங்களை அறிவிக்கின்றன. வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகள் பாதுகாப்பானவை என்பதால் பாதுகாப்பான முதலீட்டை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications