சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பிற நிதி நிறுவனங்களைப் போலவே மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வருடாந்திர வைப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியும், முதலீட்டு காலம், வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு டெபாசிட் செய்வது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிலர் முதலீடு செய்வதற்காக நல்ல திட்டங்களை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் பங்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி போன்றவற்றில் முதலீடு செய்வது பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். எனவே, பாதுகாப்பான முறையில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்ய எஸ்பிஐ வங்கியின், இந்த "எஸ்பிஐ வருடாந்திர டெபாசிட் திட்டம்" சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்தைப் பெற முடியும்.

எஸ்பிஐ வருடாந்திர டெபாசிட் திட்டத்தின் கீழ், எவ்வளவு டெபாசிட் செய்ய முடியும்?: இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்ய எந்த ஒரு வரம்பும் கிடையாது குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் நீங்கள் டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 36 மாதங்கள், 60 மாதங்கள், 84 மாதங்கள் மற்றும் 120 மாதங்கள் வரை முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வரம்புகள் இல்லை, உங்களால் முடிந்த அளவு தொகையை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு, ப்ரீமெச்சூர் பேமெண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி டெபாசிட்டர்ரின் கணக்குகளில் இருக்கும் தொகையைப் பொறுத்து 75% வரையிலான ஓவர் டிராப்ட் அல்லது லோன் வழங்கப்படுகிறது. நாம் தங்க நகைகளை வைத்து பெரும் கடன் எவ்வாறு இருக்கிறதோ அதைப் போலவே ஓவர் டிராப்டில் நம் சேமிப்புகளை வைத்து வங்கிகள் கடன் கொடுக்கும்.
எஸ்பிஐ டெபாசிட் திட்டத்தின் மூலம் நான்கு கால அளவுகளில் நாம் டெபாசிட் செய்ய முடியும். எனவே, இந்த கால அளவை பொறுத்து டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி விகிதங்களும் மாறுபடலாம்.
மேலும், இந்தத் திட்டத்தினை, நீங்கள் அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடலாம். எனவே, இந்த திட்டத்தைப் பற்றி மேலும் அறிய அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளை அணுகவும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் கணக்கை, நீங்கள் வேறு எஸ்பிஐ வங்கி கிளைகளுக்குள் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தின் கீழ், டெபாசிட்டர் அனைவரும் ஒருமுறை தங்களது பணத்தை டெபாசிட் செய்வார்கள். நான்கு கால அளவுகள் குறிப்பிடப்பட்டது போல், ஏதேனும் ஒரு கால அளவை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு எஸ்பிஐ வங்கி உங்களுக்கு மாதம், மாதம் முதலும் வட்டியும் சேர்த்து இஎம்ஐ போல உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும். இதனால் உங்களின் முதலீட்டுத் தொகை மாதம் மாதம் குறைந்து கொண்டே வரும். மேலும், நீங்கள் தேர்வு செய்த கால அளவை பொறுத்து உங்களுக்கு தொகை வந்து கொண்டிருக்கும். கால அளவு முதிர்வு பெறும்போது உங்களுடைய கணக்கில் முதலீட்டு தொகையானது பூஜ்ஜியமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications