இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குரூப் கடைசியாக ஐபிஓ வெளியிட்ட வருடம் 2020, ஆம் எஸ்பிஐ வங்கி கீழ் இயங்கும் கிரெடிட் கார்டு பிரிவான எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட்டப்பட்டது. இதற்கு முன் 2017ல் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தது.
இந்த நிலையில் 5 வருடத்திற்கு பின்பு எஸ்பிஐ தனது பண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் எஸ்பிஐ நிர்வாகம் சிறிய அளவிலான பங்கு இருப்பை விற்க முடிவு செய்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் தனது துணை நிறுவனமான SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்-ல் 6.3 சதவீத பங்குகளை IPO மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 6 அன்று நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கி, SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 3.206 கோடி பங்குகள் பொது சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. ஐபிஓ வெளியிட ஆரம்பக்கட்ட ஒப்புதல் மட்டுநே எஸ்பிஐ உயர்மட்ட நிர்வாகத்திடம் இருந்து கிடைத்துள்ளது. செபி முதல் பல இடத்தில் அடுத்தக்கட்ட அனுமதிகளை பெற்ற பின்னரே ஐபிஓ வெளியிடும் நாள் மற்றும் விபரங்கள் வெளியாகும்.
எஸ்பிஐ நிர்வாகம் IPO கட்டமைப்பு ஒப்பந்தத்தை நவம்பர் 10ஆம் தேதியன்று கையெழுத்திடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ முயற்சி 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் எனவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது SBIயின் மூன்றாவது துணை நிறுவன IPO ஆகும். முன்னதாக SBI கார்ட்ஸ் மற்றும் SBI லைஃப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடப்பட்டது. இந்த IPO மூலம் SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்பது ஒரு கூட்டணி நிறுவனமாகும், இந்த நிறுவனம் எஸ்பிஐ வங்கி மற்றும் பிரான்ஸ் நாட்டின் AMUNDI ஆகியவற்றின் கூட்டணியில் இயங்கி வருகிறது. AMUNDI உலகின் முன்னணி பண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் ஒன்று.
2011ஆம் ஆண்டு இரு நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி இந்த SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்ற கூட்டணி நிறுவனத்தில் எஸ்பிஐ 61.90 சதவீத பங்குகளும், AMUNDI 36.36 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. 1.74 சதவீத பங்குகளை மற்ற சிறு பங்குதாரர்கள் கையில் உள்ளது. தற்போது எஸ்பிஐ இதில் 6.3 சதவீத பங்குகளை IPO மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தான் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட்-ன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜராக விளங்குகிறது. இந்நிறுவனம் 30 வருடங்களுக்கு அதிகமாக சந்தையில் இயங்கி வருகிறது. இந்த ஐபிஓ உடனடியாக பலன் அளிக்காவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்கலாம்.
2025ஆம் நிதியாண்டில் SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் 4,231 கோடி ரூபாயாக இருந்தது. இது SBI குரூப் மொத்த வருமானத்தில் 0.64 சதவீதம் ஆகும். ரிசர்வ் மற்றும் உபரி தொகை 5,108.5 கோடி ரூபாயாக உள்ளது. இது எஸ்பிஐ குரூப் ரிசர்வில் 1.2 சதவீதம். இந்நிறுவனம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications