SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா..? திடீர் கட்டண உயர்வு.. சம்பள கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பு..!!

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்றவை மக்களின் தினசரி பயன்பாட்டில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட பிறகு ஏடிஎம் பயன்பாடு பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆயினும் முக்கியமான கட்டத்தில், ரொக்க பணத்திற்கான தேவை வரும்போது ஏடிஎம் தான் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஏடிஎம் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது ATM மற்றும் மெஷின் மூலம் டெபாசட் மற்றும் வித்டிரா செய்யும் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டணங்கள் டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன என்றும் அறிவித்துள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பு இருக்கும்..? குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எந்த வகையில் பாதிப்பு இருக்கும்..?

SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா..? சம்பள கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பு..!!

இலவச பரிவர்த்தனைகள் எண்ணிக்கை
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வழக்கமாக வேறு வங்கி ATM-யில் மாதம் 5 முறை இலவசமாக பயன்படுத்தலாம், இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பது மிகப்பெரிய குட்நியூஸ். மேலும் இந்த 5 இலவச பரிவர்த்தனையில் பணம் எடுப்பதை தாண்டி, பேலன்ஸ் செக் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற சேவைகளும் அடக்கம்.

கட்டணம் உயர்வு
இனி இலவச வரம்பு முடிந்த பிறகு SBI ஏடிஎம் கார்டு மூலம் வேறு வங்கிகளின் ATM-யில் பணம் எடுக்க வேண்டும் என்றால் ரூ.23 + GST செலுத்த வேண்டும். இது முன்பு ரூ.21 + GST-ஆக இருந்தது.

மேலும் நிதி சாரா பரிவர்த்தனைகளான பேலன்ஸ் செக் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற சேவைகளுக்கான கட்டணம் ரூ.11 + GST-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.10 + GST-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச பரிவர்த்தனை வரம்பு முடிந்த பிறகு மட்டுமே புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

சம்பள கணக்கு வைத்துள்ளவர்களுக்கு செக்
SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வேறு வங்கி ATM-யில் மாதம் 10 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே இனி கிடைக்கும். முன்பு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வரம்பில்லா சேவை இருந்தது, ஆனால் தற்போது வெறும் 10 முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.

10 இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு பணம் வித்டிரா செய்ய ரூ.23 + GST மற்றும் ரூ.11 + GST பேலன்ஸ் செக் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்ற நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு செலுத்த வேண்டும்.

எந்த கணக்கிற்கு பாதிப்பில்லை
இதேபோல் SBI டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் SBI ATM-யில் பயன்படுத்தும் போது எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. SBI ATM-யில் கார்ட்லெஸ் கேஷ் வித் டிராவல் வரம்பில்லாமல் தொடர்ந்து இலவசமாக இருக்கும். மேலும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு எந்த கட்டண மாற்றமும் இல்லை. கிசான் கிரெடிட் கார்டு (KCC) கணக்குகளும் இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படவில்லை.

கட்டண உயர்வுக்கு காரணம் என்ன..?
இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் அதாவது வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணம் உயர்ந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ATM-யை பயன்படுத்தும் போது இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் SBI சொந்த ATM-யில் பயன்படுத்தும் போது எந்த கட்டணமும் இல்லை.

இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி எஸ்பிஐ ஏடிஎம்களை தேடி பணம் எடுக்க வேண்டும், இதன் மூலம் கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+