இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் இவ்வங்கியின் அடுத்த தலைவர் அதே நாளில் பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் வங்கி யாரை புதிய தலைவராக நியமிக்க உள்ளது என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்திய மக்களின் பெரும் பகுதி பணத்தை கையாளும் வங்கி என்பதால் எஸ்பிஐ வங்கியின் தலைவராக நியமிக்கப்படுபவர் திறமைசாலியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டிபென்டென்ட் அமைப்பான நிதி சேவை நிறுவனங்கள் பணியாளர் தேர்வு வாரியம் (Financial Services Institutions Bureau - FSIB) எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கான நபர் பல தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் FSIB அமைப்பு மே 21 ஆம் தேதி நேர்முக தேர்வு நடத்த உள்ளது. இதே நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னணிப் போட்டியாளர்கள்: தற்போது வெளியாகியுள்ள தகவல் படி எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கு SBI வங்கியின் மூன்று நிர்வாக இயக்குநர்களான சி.எஸ்.ஷெட்டி, அஸ்வினி குமார் திவாரி மற்றும் வினய் எம். தொன்சே ஆகியோர் இந்தப் பதவிக்கான முன்னணிப் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இதேவேளையில் SBI வங்கியின் நான்காவது நிர்வாக இயக்குநர் அலோக் குமார் சௌத்ரி ஜூன் மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளார்.
பொது துறை நிதி நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பு FSIB க்கு உள்ளது. இதனால் நாளை அதாவது மே 21 ஆம் தேதி FSIB அமைப்பு மூவரையும் இன்டர்வியூவ் செய்ய உள்ளது. இதில் தேர்வான நபருக்கு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தினேஷ் காரா ஓய்வு பெறும் ஆகஸ்ட் 28 தேதிக்கு அடுத்த நாளே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.
3 தலைகளின் அனுபவம்: இந்த மூன்று பேரில் மூத்தவர் சிஎஸ்.ஷெட்டி எஸ்.பி.ஐயில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 1991 இல் பணியில் சேர்ந்த திவாரி (வயது 57) இந்த மூவரில் இளையவர். தொன்சே 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றவர். அவரும் 1988 இல் probationary officer ஆக எஸ்.பி.ஐயில் சேர்ந்தவர்.
புதிய தலைவரின் சவால்கள்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவர் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில், எஸ்.பி.ஐயின் செயல்பாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. இதேபோன்ற அல்லது இதை விடவும் சிறப்பான பர்பாமென்ஸ்-ஐ கொடுக்க வேண்டும்.
தினேஷ் காராவின் பதவிக்காலத்தில் எஸ்பிஐ வங்கி பங்கு விலை ரூ.250 லிருந்து ரூ.820 வரை உயர்ந்தது. எஸ்.பி.ஐயின் வளர்ச்சிப் பாதையில் அடுத்த தலைவர் சிறப்பாக வழிநடத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications