இந்தியாவைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்றால் மக்களின் ஞாபகத்திற்கு வருவது வங்கிகளில் வழங்கக்கூடிய FD எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டங்கள்.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறந்த நிலையான வைப்பு தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு நிலையான வைப்பு தொகை திட்டங்களை வழங்குகிறது. இதில் திட்டத்தில் காலத்திற்கு ஏற்ற வகையில் வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்படுகின்றன.
நமது முதலீட்டுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் கணிசமான தொகை வட்டியாக கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இதில் முதலீடு செய்யலாம். பொதுவாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கு 60 வயதுக்கு கீழ் இருப்பவர்களை விட மூத்த குடிமக்களான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு விழுக்காடு அதிகளவு வட்டியை வழங்குகின்றன.
எஸ்பிஐ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கு 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பத்து ஆண்டு கால திட்டங்களுக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு இதே காலகட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக 48 வயதுடைய ஒரு நபர் எஸ்பிஐ-யில் 10 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு தொகை திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். தற்போது வங்கி வழங்கக்கூடிய வட்டி விகிதம் 6.5%. அதாவது ரூ.10 லட்சத்திற்கு ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி 6.5%. 10 ஆண்டுகளில் இவருக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை ரூ.19,05,558, அவருடைய ரூ.10,000 லட்சம் முதலீடுக்கு 10 ஆண்டுகளில் கிடைத்த வட்டி ரூ.9,05,508.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்றால் டெபாசிட் செய்யப்படும் தொகை ரூ.10 லட்சம் டெபாசிட் காலம் 10 ஆண்டுகள் இவர்களுக்கு கிடைக்கும் வட்டி ஒரு ஆண்டுக்கு 7.5% . எனவே 10 ஆண்டுகள் முடிவில் இவர்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.21,02,349 இதில் வட்டியாக மட்டும் ரூ.11,02,349 கிடைக்கிறது.
வங்கிகளில் செய்யப்படுகின்ற இத்தகைய டெபாசிட்டுகள் பாதுகாப்பானவை மட்டும் அல்ல பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80c இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை இதற்கு வரி விலக்கு பெற முடியும். ஆனால் இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி கணக்கிடப்படுகிறது. அதாவது இந்த வட்டியானது உங்களது வருமானத்துடன் சேர்த்து கணக்கில் கொள்ளப்படும்.
Story Written by: devika


Click it and Unblock the Notifications