ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் NRI வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களுடன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகின்றன. SBI பேங்க்-இன் சமீபத்திய திட்டங்களான அம்ரித் கலாஷ் மற்றும் வீ கேர் போன்ற திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
SBI அம்ரித் கலாஷ்: எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டம் 400 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டம் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.60% அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2023 வரை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இது அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான திட்டம் ஆகும். நல்ல வருமானத்துடன் கூடிய பிக்சட் டிபாசிட் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

எஸ்பிஐ விகேர் திட்டம்: இந்தத் மூத்தக் குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது இந்த திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும். மூத்த குடிமக்கள் தாங்கள் பிக்சட் டெபாசிட்களில் அதிக வருமானம் பெற நினைத்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.50%.
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி யோஜனா: புதிதாக தொடங்கப்பட்ட எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி யோஜனா என்பது போட்டி வட்டி விகிதங்களை வழங்கும் 444 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இதன் கீழ் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.50% வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் ஆண்டுக்கு 7.75% வட்டி கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் FDக்கு எதிராக கடனையும் பெறலாம். அம்ரித் விருஷ்டியில் முதலீடு செய்வதற்கான கடைசித் தேதி மார்ச் 31, 2025 ஆகும், இது அதிக வருவாய் ஈட்டும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வங்கிகளும் தங்களுடைய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. மேலும் சில வங்கிகள் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளனர். சமீபத்தில் வங்கிகளின் கடன் அதிகரித்து டெபாசிட் குறைந்ததாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதன் பெயரில் பல வங்கிகளும் தங்களுடைய டெபாசிட் அதிகரிக்கும் பொருட்டு தற்போது அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications