இந்தியாவை உலுக்கிய SBI வங்கி சைபர் அட்டாக்.. ஆனா வங்கி சொல்வது என்ன.. செம டிவிஸ்ட்..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வில் இருக்கும் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிநபர் விபரங்கள், 2722க்கும் அதிகமான கடன் விண்ணப்பங்கள் மற்றும் வங்கி கணக்கு திறக்கப்பட்ட ஆவணங்கள் எனப் பல லட்சம் கணக்குகளின் தரவுகளை Siriusim என்ற முகம் தெரியாத ஒரு ஹேக்கர் குரூப் சைபர் அட்டாக் மூலம் திருடி வைத்துள்ளதாக சைபர்பல்ஸ்56 என்ற சைபர் செக்யூரிட்டி கண்காணிப்பு அமைப்பு தனது எக்ஸ் பக்க பதிவில் அறிவித்தது.

இந்த தகவல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், இன்று எஸ்பிஐ இந்த மாபெரும் சைபர் அட்டாக் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விளக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சில முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது.

இன்று பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்த அறிக்கையில், வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திருடும் நோக்கில் இந்த சைபர் அட்டாக் நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டு உள்ளது.

 இந்தியாவை உலுக்கிய SBI வங்கி சைபர் அட்டாக்.. ஆனா வங்கி சொல்வது என்ன.. செம டிவிஸ்ட்..!

அக்டோபர் 16ஆம் தேதி எங்களுக்கு திரெட் இன்டலிஜென்ஸ் சர்வீஸ் நிறுவனத்திடம் இருந்தும், டிபென்ஸ் சைபர் ஏஜென்ஜி, CERT-In ஆகிய அமைப்புகளிடம் இருந்து சைபர் அட்டாக் நடந்துள்ளது குறித்து எச்சரிக்கை மெசேஜ் வந்தது.

இந்த சைபர் அட்டாக் மூலம் திருடப்பட்டு, டார்க் வெப்-ல் பகிரப்பட்டு உள்ள 3,75,000 வாடிக்கையாளர்களின் தரவுகள் மீது செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வில் வெறும் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Also Read

இந்த சைபர் அட்டாக்கில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தரவுகளில் மொபைல் எண், பிறந்த தேதி, பெயர், பாலினம், ஈமெயில், வீட்டு முகவரி ஆகிய விபரங்கள் கசிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி நிர்வாகம்.

மேலும் வங்கி கிளை விபரம், வாடிக்கையாளர் தகவல் ஆவண குறியீடுகள், லீட் ஐடி, கடன் குறித்த மெட்டாடேட்டா போன்ற தகவல்களும் திருடப்பட்டு உள்ளதாக எஸ்பிஐ நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் திருட்டு காரணமாக வங்கி செயல்பாடுகள் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது எனக் கூறிய எஸ்பிஐ நிர்வாகம் சைபர் தாக்குதலைப் பாதிப்புகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Recommended For You

சைபர் அட்டாக் குறித்துத் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவும், திருடப்பட்ட தரவுகளின் முழு விபரத்தையும் ஆய்வு செய்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி திருடப்பட்ட 3.75 லட்சம் வாடிக்கையாளர்கள் தரவுகளின் மீது முதல்கட்ட ஆய்வை மட்டுமே செய்து வருகிறது. முழுமையாக ஆய்வின் முடிவுகளை வெளியிடும் போது எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவரும்.

தற்போது அச்சம்கொள்ளும் விஷயம் என்னவென்றால் இத்தரவுகளை அடையாள திருட்டுக்காகவும், நிதி மோசடிக்காகவும், பிஷ்ஷிங் மோசடிக்காகவும், போலி கடன் விண்ணப்பங்களுக்காகவும் பயன்படுத்த முடியும் என்பது தான். எஸ்பிஐ வங்கி கொடுத்த விளக்கத்தின் படி பார்த்தால் ஆதார் அட்டையில் ஆதார் எண் தவிர அனைத்து தரவுகளையும் Siriusim ஹேக்கர் குரூப் வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+