ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய வசதியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அவசர காரணத்திற்காக அவ்வபோது கடன் வாங்கும் நபர்களுக்கு எதுவாக வங்கிகளுக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்த படி மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கும் வசதியை எளிதாக்கப்பட்டு உள்ளது.
இப்போது YONO ஆப் மூலம் முழுமையாக டிஜிட்டல் முறையில் தனிநபர் கடனை (Personal Loan) பெறலாம். வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே ரூ.1 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த சேவை அவசர தேவைகளுக்கு உடனடி பண உதவியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதி இருந்தாலும் பெரும்பாலான நேரத்தில் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

மக்கள் மருத்துவ அவசரம், குழந்தைகளின் கல்வி செலவு, திருமண செலவுகள் அல்லது பிற தேவைகளுக்கு பணம் தேவைப்படும் போது பலர் வங்கிக்கு சென்று காத்திருப்பதில் சிரமப்படுவது வழக்கம். இல்லையெனில் அவசர தேவைக்கான பெயர் தெரியாத கடன் செயலிகளில் இருந்து அதிக வட்டியில் கடனை வாங்கி வருகின்றனர்.
இப்போது எஸ்பிஐ-யின் புதிய டிஜிட்டல் கடன் மூலம் இந்த பிரச்சனை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. YONO ஆப்பில் வீட்டில் இருந்தபடியே கடன் விண்ணப்பிக்கலாம், ஆதார் அடிப்படையிலான OTP மூலம் வெரிபை செய்யப்பட்டு, CIBIL ஸ்கோர் அடிப்படையில் உடனடி கடன் அனுமதி கிடைக்கும். டிஜிட்டல் முறையில் e-sign செய்து கடன் தொகை நேரடியாக உங்கள் எஸ்பிஐ கணக்கில் வரும். முழு செயல்முறையும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் வகையில் எஸ்பிஐ பர்சனல் லோன் சேவையை மேம்படுத்தியுள்ளது.
இந்த கடன் சேவை எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் (எஸ்பிஐ சம்பள கணக்கு உள்ளவர்கள்) இதைப் பயன்படுத்தலாம். YONO ஆப்பில் உங்கள் கணக்கில் நீங்கள் எவ்வளவு கடன் தகுதி பெற்றுள்ளீர்கள் என்பதை உடனடியாக பார்க்கலாம்.
வட்டி விகிதம் எஸ்பிஐயின் MCLR அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் காலம் முழுவதும் வட்டி விகிதம் நிலையாக இருக்கும், ரெப்போ விகிதம் குறைந்தால் இக்கடனுக்கான வட்டி விகிதம் குறையாது. மேலும் பர்சனல் லோனுக்கு மறைமுக கட்டணங்கள் இல்லை என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

CIBIL ஸ்கோர் 650-700 அல்லது அதற்கு மேல் இருந்தால் கடன் தொகை அதிகமாக கிடைக்கும். சிறந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கும், சம்பள அதிகமாக பெரும் நபர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.35 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
இந்த சேவை முழுமையாக டிஜிட்டல் மற்றும் பேப்பர்லெஸ் என்பதால், ஆவணங்கள் சமர்ப்பிப்பது, கிளைக்கு செல்வது, நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இல்லை.
பாதுகாப்பான ஆன்லைன் செயல்முறை மூலம் உடனடியாக பணம் கிடைப்பது அவசர காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போதே YONO ஆப்பை திறந்து தங்கள் கடன் தகுதியை சரிபார்த்து, தேவை ஏற்பட்டால் உடனடியாக கடன் பெறலாம். இது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் ஒத்துப்போகும் முக்கிய முன்னெடுப்பாகும்.
More From GoodReturns

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications