கடந்த ஆண்டு துவக்கத்தில் தான் எஸ்பிஐ- யின் கார்டு பங்கு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.
சர்வதேச அளவில் மக்களை பதம் பார்த்து வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தினை காட்டி வருகின்றது. இதற்கிடையில் பலரும் தங்களது வேலையினை இழந்து, வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் எனில் மக்கள் தங்களது கடன்களை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று வெளியான எஸ்பிஐ கார்டு நிறுவனம், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 46% லாபத்தில் வீழ்ச்சி கண்டு 206 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டு நிறுவனமான இது கடந்த ஆண்டில் 381 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருப்பினும் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வருவாய் 6 சதவீதம் அதிகரித்து 2,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,376 கோடி ரூபாயாக கண்டிருந்தது கவனிக்கதக்கது.
இந்த நிறுவனம் நாட்டின் முன்னணி கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இது இரண்டாவது காலாண்டில் கார்டு வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்து 1.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 0.95 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இந்த நிறுவனம் 29,590 கோடி ரூபாயினை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 33,176 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் வட்டி வருமானது 9.7 சதவீதம் அதிகரித்து 1,275 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,162 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்தம் செயல்பாடாத சொத்துக்களின் மதிப்பு 4.29 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2.33 சதவீதம் அதிகரித்துள்ளது.
சில்லறை செலவினங்களுக்காக செலவழித்த தொகை 50% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது கொரோனாவிற்கு முன்பு 90 சதவீதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது இன்றைய முடிவில் 829.45 ரூபாயாக பிஎஸ்இ-யில் முடிவடைந்துள்ளது. இது 7% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.


Click it and Unblock the Notifications