இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளை விரும்பி பயன்படுத்துபவர்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். அப்படி இருக்கையில் அதற்கு ரிவார்டுகளையும் சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. எஸ்பிஐ ஒரு முக்கிய கிரெடிட் கார்டு வழங்குனராக இருந்து வருகிறது. SBI அதன் ரிவார்டு திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. மார்ச் 31, 2025 முதல் அதன் சில கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு குறைவான பாய்ண்டுகளை வழங்க உள்ளது.
சிம்பிளி கிளிக் SBI கிரெடிட் கார்டு: இனி சிம்பிளி கிளிக் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபர்களுக்கு குறைந்த ரிவார்டுகள் கிடைக்க உள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், சிம்பிளி கிளிக் SBI கார்டு வைத்திருப்பவர்கள் ஸ்விக்கியில் 10X ரிவார்டுகளுக்கு பதிலாக 5X ரிவார்டுகளை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால் அப்போலோ 24X7, புக் மை ஷோ, கிளியர் ட்ரிப், டொமினோஸ், ஐஜிபி, மிந்த்ரா, நெட்மெட்ஸ் மற்றும் யாத்ரா போன்ற பிற பிராண்டுகளுக்கு 10X ரிவார்டுகள் அப்படியே மாறாமல் இருக்கும்.
ஏர் இந்தியா எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள்: 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி முதல் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நபர்களுக்கு ரிவார்ட் பாயிண்டுகள் குறையவுள்ளது.
ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கிரெடிட் கார்டு: ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கிரெடிட் கார்டை வைத்து 100 ரூபாய் செலவழித்தால் 15 கிடைத்த பாயிண்ட்டுகள் 5-ஆக குறைக்கப்பட உள்ளது.
ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கிரெடிட் கார்டு மூலம் 100 ரூபாய் செலவழித்தால் 30 பாயின்ட்கள் ரிவார்டு கிடைக்கும். தற்போது இந்த பாயிண்டுகள் 10-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கியில் அடிக்கடி உணவு ஆர்டர் செய்பவர்கள், அடிக்கடி ஏர் இந்தியா மூலம் பயணம் செய்பவர்களுக்கு இந்த ரிவார்ட் பாயிண்ட்களின் குறைப்பு சற்று தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மற்ற கிரெடிட் கார்டு மாற்றங்கள்: IDFC ஃபர்ஸ்ட் பேங்க், அதன் கிளப் விஸ்தாரா IDFC ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி முதல் மைல்ஸ்டோன் சலுகைகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி வரை மகாராஜா பாயிண்டுகளை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
IDFC ஃபர்ஸ்ட் பேங்கின் கிளப் விஸ்தாரா கிரெடிட் கார்டில்.. சில்வர் மெம்பர்ஷிப் இனி கிடைக்காது. அதோடு கிளப் விஸ்தாரா கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்யும்போது குறிப்பிட்ட மைல்கல்லை எட்டினால் இலவசமாக வவுச்சர்கள் வழங்கப்படும். அதில் ஒரு பிரிமியம் எகானமி டிக்கெட் மற்றும் ஒரு டிக்கெட்டை ஒரு கிளாஸ் மேம்படுத்தும் வவுச்சர் ஆகியவை வழங்கப்படும்.
பிரிமியம் எகானமி வவுச்சர் மூலம் ஒரு முறை பிரீமியம் எக்கானமி கிளாஸில் இலவசமாக பயணம் செய்யலாம். 1 கிளாஸ் அப்டேட் வவுச்சர் மூலம் டிக்கெட்டை மேம்படுத்தலாம். இது தவிர பிரிமியம் டிக்கெட்களுக்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டன. ஆனால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த இலவச வவுச்சர்கள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளது. அதாவது எந்த வித இலவச வவுச்சர்களும் வழங்கப்பட மாட்டாது.


Click it and Unblock the Notifications