டெல்லி : எஸ்பிஐ கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
கடன் அட்டை வழங்குவதில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம், 8,000 கோடியிலிருந்து, 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிடுகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் அந்த வங்கிக்கு 74 சதவிகித பங்குகள் உள்ளது. மீதமுள்ள 26 சதவிகித பங்குகள் அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நான்கு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
கிரெடிட் கார்டு வணிகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மிக ஆவலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிஐ கார்ட்ஸ் பொதுப் பங்கு வெளியீடானது அடுத்த ஆண்டு 2020க்குள் வெளியிடப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
இதில் புதியதாக 500 கோடி ரூபாய் பங்குகள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாரத ஸ்டேட் பேங்க் வங்கியின் 4 கோடி பங்குகளும், சிஏ ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இதன் மூலம் 13 கோடி பங்குகள் வரும் 2020 மார்ச்சுக்குள் விற்பனை செய்யப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
இதன் மூலம் 8,000 கோடி ரூபாய் முதல் 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
கோட்டாக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்ஸிஸ் வங்கி கேப்பிட்டல், டி.எஸ்.பி மெரில் லின்ச், ஹெச்.எஸ்.பி.சி செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்கெட்ஸ் (இந்தியா), நோமுரா ஃபைனான்ஷியல் அட்வைசரி அண்ட் செக்யூரிட்டீஸ் (இந்தியா) அன்ட் எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கிரெடிட் கார்டு வழங்குதலில் முதலிடத்தில் உள்ள ஹெச்.சி.எஃப்.சியை அடுத்து, எஸ்.பி.ஐ கார்ட்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications