இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிரெடிட் கார்டு சேவை பிரிவான எஸ்பிஐ கார்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) அபிஜித் சக்ரவர்த்தி பொறுப்பேற்றுள்ளார். இவருடைய பணி ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இந்தியாவின் கிரெடிட் கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல், நாட்டின் கிரெடிட் கார்டு தொடர்பான கடன் விநியோகம் அதிகரித்து வரும் நேரத்தில் ஏற்கனவே பெரிய வர்த்தக ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் எஸ்பிஐ கார்ட்ஸ் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையில் வேகமாக வளர உள்ளது.

எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ராம மோகன் ராவ் அமரா பதவி விலகியதை தொடர்ந்து அபிஜித் சக்ரவர்த்தி புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
அபிஜித் சக்ரவர்த்தி வங்கித் துறையில் சுமார் 34 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநராக உள்ளார். இதற்கு முன்பு SBI வங்கியின் ரீடைல் மற்றும் கார்பரேட் வங்கி, வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் IT உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார் அபிஜித் சக்ரவர்த்தி.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அபிஜித் சக்ரவர்த்தி எஸ்பிஐ கார்டு நிறுவனம் மிகுந்த வலிமை உடனும், பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்துள்ளது என்று கூறினார். இதேவேளையில் நாட்டின் கிரெடிட் கார்டு வர்த்தகம் வியக்க வைக்கும் வகையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் தனது நிர்வாகத்தில் நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சியை அடைவதில் அதிகப்படியான கவனம் செலுத்தி எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் பரந்த திறனைப் பயன்படுத்திக் முழுமையான அவுட்புட்-ஐ சந்தையில் காட்டுவதை இலக்கான கொண்டுள்ளார் அபிஜித் சக்ரவர்த்தி.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில், எஸ்பிஐ கார்டின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக அபிஜித் சக்ரவர்த்தி நியமித்ததில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அப்பணியை செவ்வென செய்ய அவரை வரவேற்பதில் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் 0.57 சதவீதம் சரிந்து 849.90 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications