பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள 2,946 வங்கியில் காலியாக உள்ள 2,964 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் 2,600 புதிய பணியிடங்களும், 364 நிலுவையில் உள்ள பணியிடங்களும் அடங்கும்.
பணியிடங்கள் : இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் அகமதாபாத், அமராவதி, பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் : இப்பணியிடங்களுக்கு SC/ST/OBC/EWS/PwBD பார்வை குறைபாடு உள்ளவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலியிடங்கள் தற்காலிகமானவை மற்றும் வங்கியின் உண்மையான தேவையைப் பொறுத்து மாறுபடலாம். விண்ணப்பதாரர், ஒரு வட்டத்தின் காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வட்டத்தின் காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், வேறு எந்த வட்டத்தின் காலியிடத்திற்கும் விண்ணப்பிக்க கூடாது.
தேர்ந்தெடுக்கப்படும் நபர் SMGS-IV தரத்திற்கு பதவி உயர்வு பெறும் வரை அல்லது 12 ஆண்டுகள் சேவை காலம், எது பின்னர் வருகிறதோ அதுவரை இடை வட்டப் பணி மாற்றம்/ நிறுவன மையம் பதவி/ நிறுவன மைய நிறுவனப் பணி/ வெளிநாட்டுப் பணிக்கு தகுதியற்றவர்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அந்த வட்டத்தின் குறிப்பிட்ட உள்ளூர் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் திறமையானவராக இருக்க வேண்டும். விண்ணப்பித்த வட்டத்தின் உள்ளூர் மொழியின் அறிவுத் தேர்வு தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு, திரையிடல், நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். அதேபோல், எஸ்பிஐ-யில் எழுத்தர்/மேற்பார்வை பிரிவில் பணிபுரியும் நபர்கள் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். மேலும், எஸ்பிஐ/அசோசியேட் வங்கிகளில் அதிகாரி தரத்தில் இருந்து ராஜினாமா செய்தவர்கள் அல்லது எஸ்பிஐ-யில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வங்கியில் இருந்து ராஜினாமா செய்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள், PwBD (பொது/ EWS) - 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள், PwBD (OBC) - 13 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. வணிக அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக பொறியியல், மருத்துவம், செலவு கணக்கியல் அல்லது பட்டய கணக்கியலில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : Circle Based Officers பணிக்கான விண்ணப்பம் 09.05.2025ஆம் தேதி தொடங்கிய நிலையில், 30.06.2025ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி..?:
- முதலில் அதிகாரப்பூர்வ https://ibpsonline.ibps.in/sbicboapr25 இணையதளத்தை பார்வையிடவும்.
- அதில், விளம்பர எண்.CRPD/CBO/202526/03 இன் கீழ் "புதிய பதிவு" என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் மூலம் பதிவு செய்து, தேவையான விவரங்களை நிரப்பி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- படிவத்தை நிரப்பி, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். (புகைப்படம், கையொப்பம், சான்றிதழ்கள்)
- பின்னர், விண்ணப்பக் கட்டணமாக பொது/ஓபிசி உள்ளிட்ட பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு https://bank.sbi/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892 என்ற லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications