இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காராவின் தற்போதைய பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைய உள்ளதால், புதிதாக இப்பதவியில் நியமிக்க தகுதி வாய்ந்த அதிகாரியை தேடும் பணிகளை துவங்கிய நிலையில், தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் தினேஷ் காராவின் பதவிகாலம் 2024 ஆகஸ்ட் வரை பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, எஸ்பிஐ சேர்மனுக்கு 63 ஆண்டுகள் வரை பதவிக்காலம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தினேஷ் காரா இந்த 63 வயது என்ற அளவீட்டை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அடைவார். இதனால் இவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதேவேளையில் பிற பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு ஓய்வுபெறும் வயதை எட்டுவதற்கு பல மாதங்கள் இருக்கும் வேளையிலும் அவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாத நிலை உள்ளது.
எஸ்பிஐ சேர்மன் தினேஷ் காரா போலவே, எஸ்பிஐ நிர்வாக இயக்குனராக இருக்கும் அஸ்வினி குமார் திவாரி-யின் பதவிக் காலம் ஜனவரி, 2024 இல் முடிவடைய உள்ளது. 63 வயதை எட்ட காலம் இருக்கும் வேளையில் இவருக்கும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தினேஷ் காரா மற்றும் அஸ்வினி குமார் திவாரி ஆகியோருக்கு பதவி காலம் நீட்டிக்கப்படுவது எஸ்பிஐ வங்கியின் அடுத்தக்கட்ட தலைமை பொறுப்பு தேர்வுகளில் இருக்கும் பலரின் வாய்ப்புகளை சீர்குலைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போதைய எம்.டி.யாக இருக்கும் சி.எஸ்.செட்டி தான் அடுத்ததாக இப்பதவியில் அமர்வார் என பலரும் கணிக்கப்பட்ட நிலையில் பதவிக்காலம் நீடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பான ஏஜென்சியான நிதிச் சேவைகள் நிறுவனப் பணியகம் - எஸ்பிஐ மற்றும் எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து கடந்த சில மாதங்களாக ஆலோசனை செய்து வருகிறது, இன்னும் இதில் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் தினேஷ் காராவுக்கு மூன்று ஆண்டு பதவிக்காலம் கொடுக்கப்பட்டு இப்பதவியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் காலாண்டில், எஸ்பிஐ வங்கியின் லாபம் 178% உயர்ந்து ரூ.16,884 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications