இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம். இதற்கு வித்திட்டவர் திருபாய் அம்பானி. இவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட பல தொழில்களை கவனித்து வருகின்றனர்.
அனில் அம்பானி: முகேஷ் அம்பானி தற்போது தொழில் துறையில் உச்சத்தில் இருக்கிறார். ஒரு காலத்தில் ரிலையன்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்களை வெற்றி கரமாக நடத்தி வந்தவர் தான் அனில் அம்பானி. ஆனால் அவர் நடத்தி வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் வீழ்ச்சி அடைந்து திவால் நிலைக்கு சென்றன. இந்நிலையில் அனில் அம்பானி தற்போது படிப்படியாக அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறார். அவருக்கு நெருக்கடி தரும் வகையில் எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி நடவடிக்கை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கி இருந்தது. இந்நிலையில் அந்த கடன் கணக்கை மோசடி என எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ தரப்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஜூன் 30ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் எஸ்பிஐ நிறுவனம் கடிதம் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளது.
மோசடி என அறிவிப்பு: கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் வாங்கிய கடன் விவகாரத்தில் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. இது நீண்டகாலமாக இழுபறியில் இருப்பதால் எஸ்பிஐ நிறுவனம் இந்த கடன் கணக்கினை மோசடி கணக்கு என வரையறை செய்திருக்கிறது. அந்த சமயத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்த அனில் அம்பானி மீது மத்திய ரிசர்வ் வங்கியில் புகாரும் அளிக்க உள்ளது.
மூன்று முறை நோட்டீஸ்: எஸ்பிஐ நிறுவனம் இந்த கடன் விவகாரத்தில் பதில் அளிக்கும்படி 2023 டிசம்பர் ,2024 மார்ச், 2024 செப்டம்பர் என தொடர்ச்சியாக நோட்டீஸ்களை அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ்கள் மீது எந்த பதிலும் கிடைக்காததால் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாங்கிய கடனை மோசடி என அறிவிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் எஸ்பிஐ நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனை அடுத்து நிறுவன திவால் தீர்வு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. தீர்வு நடவடிக்கைகளுக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
திவால் நடைமுறை: திவால் நடைமுறை தொடங்குவதற்கு முன்பாகவே எஸ்பிஐ-இல் வாங்கப்பட்ட கடனை தான் தற்போது மோசடி என அறிவித்திருக்கிறார்கள், ஏற்கனவே திவால் தீர்வு முறைகள் தொடங்கப்பட்டு விட்டதால் எஸ்பிஐ-இன் இந்த நடவடிகைகள் நிறுவனத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்கிறது எனவே முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என கூறியுள்ளது. திவால் நடைமுறைகள் தொடங்கியதால் அதில் கிடைக்கும் தீர்விலேயே இந்த கடன் விவகாரமும் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications