SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. டிசம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு கட்டணங்களில் மாற்றம்..!!

எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மாற்றப்பட்டு, இனி கூடுதலாக 1% கட்டணம் பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. போக்குவரத்து பரிவர்த்தனையின் மதிப்பு 30,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 1% கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. டிசம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு கட்டணங்களில் மாற்றம்..

இது கிரெடிட் கார்டின் ஒரு மாத மொத்த பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக கணக்கிடப்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு ஒற்றை பரிவர்த்தனையில் 35,000 ரூபாய் செலுத்தினால், அதற்கு 1% கட்டணமாக 350 ரூபாய் கட்டணமாக வங்கிக்கு செலுத்த வேண்டும்.

அடுத்ததாக எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பொறுத்தவரை, ஒரு பில்லிங் சைக்கிளில் (Billing Cycle) அதாவது இரண்டு ஸ்டேட்மென்ட் தேதிகளுக்கு இடைப்பட்ட 28 முதல் 31 நாட்கள் செய்யப்படும் மொத்த எரிபொருள் செலவு 50,000 ரூபாயை தாண்டினால் மட்டுமே 1% கட்டணம் விதிக்கப்படும்.

Also Read

ஒரு மாதத்தில் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட்டு அதற்காக 50,000 ரூபாய்க்கு கீழே இருந்தால் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லை. ஒருவேளை செலவு 50,000 ரூபாய் என்ற வரம்பை தாண்டிவிட்டால், முழு எரிபொருள் செலவுக்கும் 1% கட்டணம் பொருந்தும்.

பெட்ரோல் பங்குகள், எரிபொருள் டீலர்கள் மற்றும் அது தொடர்பான விற்பனை நிலையங்களை குறிக்கும் MCC 5172, 5541, 5542 மற்றும் 5983 ஆகிய குறியீடுகளின் கீழ் நடக்கும் பரிவர்த்தனைகள் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளது.

சாதாரண குடும்பங்களின் மாதாந்திர எரிபொருள் செலவு பெரும்பாலும் 50,000 ரூபாய்க்குள் தான் இருக்கும் என்பதால், பெரும்பாலான சாதாரண பயனர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். போக்குவரத்து செலவுகளைப் பொறுத்தவரை, பெரிய தொகையாக இருந்தால் அவற்றை பிரித்து செலுத்துவது நல்லது.

Recommended For You

இந்த கட்டண மாற்றங்கள் குறித்த சந்தேகங்களுக்கு எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர் சேவை எண் 1860 180 1290-ஐ தொடர்பு கொள்ளலாம். எனவே நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் உங்களின் கிரெடிட் கார்டு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+