SBI கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. இனி இதுக்கு ரிவார்ட் பாயின்ட்ஸ் இல்லை..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ கார்டுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டிசம்பர் 1, 2024 முதல் அதன் ரிவார்ட் புள்ளிகள் மற்றும் யூட்டிலிட்டி கட்டணக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, எஸ்பிஐ வங்கியின் சில கிரெடிட் கார்டுகளுக்கு டிஜிட்டல் கேமிங் தளங்கள் மற்றும் வியாபாரிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரிவார்ட் புள்ளிகள் அளிப்பதை நிறுத்தியுள்ளது. இந்த முடிவு, மாறிவரும் நுகர்வோர் விருப்பம் மற்றும் வர்த்தக போக்குகளுக்கும் ஏற்ப ரிவார்ட் திட்டத்தைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SBI கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. இனி இதுக்கு ரிவார்ட் பாயின்ட்ஸ் இல்லை..!!

இதன் மூலம் டிஜிட்டல் கேமிங் தளங்களிலும், டிஜிட்டல் கேமிங் மெர்சன்ட்கள் தொடர்புடைய இடத்தில் சில கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் நிதி பரிமாற்றத்திற்கு எவ்விதமான ரிவார்ட் பாயின்ட்களும் கிடைக்கு. எந்த கார்டுகளுக்கு எல்லாம் ரிவார்ட் புள்ளிகள் கிடைக்காது என்பதை செய்தியின் கடைசியில் பட்டியலிட்டு உள்ளோம்.

இரண்டாவதாக, எஸ்பிஐ கார்டு யூட்டிலிட்டி கட்டணங்களுக்கு புதிய கட்டணக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பில்லிங் சுழற்சியில் செய்யப்படும் மொத்த யூட்டிலிட்டி கட்டணத் தொகை ரூ.50,000 ஐ விட அதிகமாக இருந்தால், மொத்த யூட்டிலிட்டி கட்டணத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் தொலைபேசி, மொபைல், மின்சாரம் மற்றும் காப்பீட்டுப் பிரீமியம் கட்டணங்களுக்கு பொருந்தும்.

இந்த மாற்றங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு உரிமையாளர்களின் செலவு செய்யும் பழக்கங்களை மாற்றும், குறிப்பாக ஆன்லைன் கேமிங்கில் அதிகம் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக யூட்டிலிட்டி கட்டணங்களை செலுத்துபவர்களை பாதிக்கக்கூடும்.

டிஜிட்டல் கேமிங் தளங்கள்/வணிகர்களுக்கு ரிவார்டு புள்ளிகள் பொருந்தாத SBI கிரெடிட் கார்டுகளின் பட்டியல் இதுதான்:

AURUM • SBI Card ELITE
SBI Card ELITE Advantage
SBI Card Pulse
SimplyCLICK SBI Card
SimplyCLICK Advantage SBI Card
SBI Card PRIM
SBI Card PRIME Advantage
SBI Card Platinum
SBI Card PRIME Pro
SBI Card Platinum Advantage
Gold SBI Card
Gold Classic SBI Card
Gold Defense SBI Card
Gold & More Employee SBI Card
Gold & More Advantage SBI Card
Gold & More SBI Card
SimplySAVE SBI Card
SimplySAVE Employee SBI Card
SimplySAVE Advantage SBI Card
Gold & More Titanium SBI Card
SimplySAVE Pro SBI Card
Krishak Unnati SBI Card
SimplySAVE Merchant SBI Card
SimplySAVE UPI SBI Card
SIB SBI Platinum Card
SIB SBI SimplySAVE Card
KVB SBI Platinum Card
KVB SBI Gold & More Card
KVB SBI Signature Card
Karnataka Bank SBI Platinum Card
Karnataka Bank SBI SimplySAVE Card
Karnataka Bank SBI Card PRIME
Allahabad Bank SBI Card ELITE
Allahabad Bank SBI Card PRIME
Allahabad Bank SBI SimplySAVE Card
City Union Bank SBI Card PRIME
City Union Bank SimplySAVE SBI Card
Central Bank SBI Card ELITE
Central Bank SBI Card PRIME
Central Bank SimplySAVE SBI card
UCO Bank SBI Card PRIME
UCO Bank SimplySAVE SBI Card
UCO Bank SBI Card ELITE
PSB SBI Card ELITE
PSB SBI Card PRIME
PSB SBI SimplySAVE
SHAURYA SELECT SBI Card

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+