இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி எலக்ட்ரிசிட்டி, கேஸ் மற்றும் வாட்டர் பில்களை செலுத்தும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் 22,000 கிளைகளை SBI கொண்டுள்ளது.
ரூ.50,000-க்கு மேல் யூட்டிலிட்டி பில் செலுத்தினால் 1 சதவீத கூடுதல் கட்டணம்: SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் யூட்டிலிட்டி பில் பேமெண்ட்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. SBI பேங்க் இணையதளத்தின் படி இந்த கூடுதல் கட்டணம் டிசம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்ற பில்களை தங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், குறிப்பாக ஒரே பில்லிங் சைக்கிளில் ரூ.50,000-த்திற்கு மேல் பணம் செலுத்தினால், மொத்த பில் தொகையில் 1% கூடுதலாக SBI வசூலிக்கும். ரூ.50,000-த்திற்கு குறைவாக பணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது.
அன்செக்யூர்டு கிரெடிட் கார்டு கட்டணங்களில் மாற்றம்: பயன்பாட்டு பில்களுக்கான கூடுதல் கட்டணங்களை தவிர, பாதுகாப்பாற்ற கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களையும் SBI திருத்தியுள்ளது. எந்த வித பிணையமும் இல்லாமல் கொடுக்கப்படும் கிரெடிட் கார்டுகள் தான் அன்செக்யூர்டு கிரெடிட் கார்டு என்று கூறப்படுகிறது.
இது கார்டு பெறுபவரின் கிரெடிட் ஸ்கோரை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது. இது போன்ற அனைத்து அன்செக்யூர்டு கிரெடிட் கார்டுகளுக்கும் 3.75% கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஷௌர்யா/டிஃபென்ஸ் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களைத் தவிர, அனைத்து கார்டுதாரர்களுக்கும் இந்த விகிதம் பொருந்தும். மேலும் இந்த கட்டணம் நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, SBI பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கட்டணங்களின் திருத்தம் குறித்து தெரிவிக்கும் மின்னஞ்சல்களை அனுப்பியது. "உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். SBI கார்டில், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் உறவுகளை உருவாக்க நாங்கள் உண்மையிலேயே கடமைப்பட்டுள்ளோம். உங்கள் கிரெடிட் கார்டு தொடர்பான முக்கியமான புதுப்பிப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க இந்த மின்னஞ்சலை அனுப்புகிறோம்" என்று தெரிவித்திருந்தது.
எஸ்பிஐ இந்த ஆண்டு செப்டம்பரில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 28, 2024 முதல் புதிய கிளப் விஸ்டாரா எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. மேலும், செப்டம்பர் 28, 2024 முதல் புதிய கிளப் விஸ்டாரா எஸ்பிஐ கிரெடிட் கார்டு பிரைம் வழங்குவதை நிறுத்தவும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications