எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், பயன்படுத்தும் பண அளவும் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பலே முக்கியமான மாற்றங்களைச் சமீபத்தில் ஆர்பிஐ கொண்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட கட்டணத்தை மாற்றியுள்ளது, இப்புதிய கட்டணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது. அப்படியானால் நவம்பர் 15 க்கு பின்பு நீங்கள் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் புதிய கட்டணங்கள் அடிப்படையில் வசூலிக்கப்படும்.

புதிய கட்டணம்

புதிய கட்டணம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகை பேமெண்ட்-க்குமான கட்டணத்தை நவம்பர் 15 ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது. அதாவது ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற்கு 199 ரூபாய் + வரி வசூலிக்கப்பட உள்ளது. மேலும் வீட்டு வாடகைக்கான பேமெண்ட்-க்கு 99 ரூபாய் + வரி விதிக்கப்பட்டு உள்ளது.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

இந்தியாவில் தற்போது பெரும்பாலான சேவைக்குக் கிரெடிட் கார்டு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது, சமீபத்தில் மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்குக் கூடக் கிரெடிட் கார்டு பயன்படுத்த அனுமதி அளித்து அதற்கான மாற்றங்களை வருமான வரித் தளத்தில் செய்தது.

யூபிஐ பேமெண்ட்

யூபிஐ பேமெண்ட்

இதேபோல் இந்தியா முழுவதும் யூபிஐ பேமெண்ட் அடிப்படையாக மாறியிருக்கும் நிலையில், இதிலும் கிரெடிட் கார்ட் பயன்படுத்திப் பேமெண்ட் செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீட்டு வாடகைக்குக் கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் சேவை பலருக்குப் பெரிய அளவில் உதவும்.

வீட்டு வாடகை

வீட்டு வாடகை

இந்தியாவில் வீட்டு வாடகைக்குக் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பேமெண்ட்-க்கு ஐசிஐசிஐ வங்கி அக்டோபர் 20 முதல் கட்டணம் விதித்து வந்த நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கியும் கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதமும்

ஒவ்வொரு மாதமும்

RedGiraffe, Mygate, Cred, Paytm மற்றும் Magicbricks போன்ற பல்வேறு தளத்தில் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு வாயிலாக வீட்டு வாடகையைச் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தப் பேமெண்ட் அனைத்திற்கும் அதாவது ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தும் போது 99 ரூபாய் + வரி என்பதைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+