SBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? 3.75 லட்சம் பேரின் வங்கிக் கணக்கு விபரம் திருட்டு.. மக்களே உஷார்..!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களின் தனிநபர் விபரங்கள், கடன் விண்ணப்பங்கள், வங்கி கணக்கு திறக்கப்பட்ட ஆவணங்கள் என பல லட்சம் கணக்குகளின் தரவுகளை வைத்துள்ளதாக Siriusim என்ற முகம் தெரியாத ஒரு ஹேக்கர் குரூப் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இணையத் தாக்குதல் அதிகரித்திருக்கும் வேளையில், அதிநவீன ஏஐ சேவைகள் மூலம் ஒவ்வொரு முக்கிய நெட்வொர்க் மீதும் இணையத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

 SBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? 3.75 லட்சம் பேரின் வங்கிக் கணக்கு விபரம் திருட்டு.. மக்களே உஷார்..!!

இதனாலேயே அமெரிக்க அரசு சமீபத்தில் ஆந்திரோபிக் நிறுவனத்தில் சில ஏஐ மாடல்களை மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

இந்த நிலையில் தான் சைபர்பல்ஸ்56 என்ற சைபர் செக்யூரிட்டி கண்காணிப்பு அமைப்பு தனது எக்ஸ் பக்க பதிவில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடப்பட்டது குறித்து வெளியிட்டு உள்ளது.

Also Read

இந்த பதிவில் Siriusim என்ற அமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 3,75,000 பேரின் தனிநபர் தகவல்களை CSV பார்மெட்டிலும், கடன் விண்ணப்பங்கள், வங்கிக் கணக்கு திறக்கப்பட்ட ஆவணங்கள் என 2722 PDF பைல்களையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தனிநபர் தகவல்களில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரின் பர்சனல் தரவுகள், வாடிக்கையாளரின் முகவரி உட்பட வங்கி கணக்கு, கடன் கணக்கு தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பதாக CyberPulse56 தெரிவித்துள்ளது.

இந்த தகவல் கசிவு மூலம் எத்தனை எஸ்பிஐ வாடிக்கையாளர் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதற்கான கணிப்பையும், சாத்தியகூர்களையும் இதுவரையில் வங்கி தரப்பில் உறுதி செய்யவில்லை. எஸ்பிஐ வங்கி இதுகுறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், CyberPulse56 ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Recommended For You

இந்த Siriusim என்ற முகம் தெரியாத ஒரு ஹேக்கர் குரூப் வைத்துள்ள தகவல் உண்மையான தகவல் எனில், இதன் மூலம் இத்தரவுகளை அடையாள திருட்டுக்காகவும், நிதி மோசடிக்காகவும், பிஷ்ஷிங் மோசடிக்காகவும், போலி கடன் விண்ணப்பங்களுக்காகவும் பயன்படுத்த முடியும் என சைபர்பல்ஸ்56 அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் இந்தியாவில் சுமார் 20 வங்கிகள், NBFC-க்கள், நிதியியல் நிறுவனங்கள், பின்டெக் நிறுவனங்கள் மீது பெரும் சைபர் அட்டாக் நடந்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை அக்டோபர் 15ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் சைபர்செக்யூரிட்டி என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+