எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என போலியாக எஸ்.எம்.எஸ் வருவது குறித்து மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளிலிருந்து போலியாக அழைப்பது போன்று வாடிக்கையாளர்களிடம் ஒரு முறை கடவுச்சொல்லை பெற்று, மோசடிகளை நடைபெற்று வருவது குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது புதிதாக வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மோசடி நடைபெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தாறுமாறான ஏற்றம்.. முதல் நாளே பெருத்த ஏமாற்றம் கொடுத்த தங்கம் விலை..!

போலி எஸ்.எம்.எஸ்
"உங்கள் எஸ்பிஐ கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என வரும் எஸ்.எம்.எஸ் போலியானது. அது போன்ற மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் உங்களுக்கு வந்தால் அதை நிராகரிக்கவும். உடனே வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும். phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளக்கம்
ஒருவேலை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி நபர்களால் எடுக்கப்பட்டதாகச் சந்தேகம் இருந்தாலும், உடனே வங்கியில் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய ரிசர்வ் வங்கி போலி எஸ்.எம்.எஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகளில், "தேடுபொறி இணையதளங்களில் உள்ள பட்டியலிடப்பட்டுள்ள போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சரியான தொடர்பு விவரங்களுக்கு எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எப்போதும் பார்வையிடவும்" என் தெரிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் மோசடிக்கு வழிவகுக்கும்
டிவிட்டரில், "எஸ்எம்எஸ் மோசடிக்கு வழிவகுக்கும், மேலும் உங்கள் சேமிப்பை இழக்க நேரிடும். அதில் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய கூடாது. எஸ்.எம்.எஸ்-ல் இணைப்புகள் வரும் போது அதில் சரியான இணைப்புகள் இருக்கின்றனவா என சரி பாருங்கள். விழிப்புடன் இருங்கள் #SafeWithSBI" என தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல்
எஸ்பிஐ வங்கி ஒரு வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்கள் விவரங்களைக் கேட்காது. உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட தகவலைக் கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால் உடனடியாக புகாரளிக்கவும். இது ஒரு மோசடி மின்னஞ்சலாக இருக்கலாம் எனவும் எஸ்பிஐ கூறியுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?
ஒருவேலைத் தவறுதலாக இது போன்றவற்றில் உங்கள் விவரங்களை அளித்திருந்தால் உடனே உடனே உங்கள் கடவுச்சொற்களை மாற்றவும்" என்று எஸ்பிஐ இணையதளம் குறிப்பிடுகிறது.