இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சேவைகள் ஜனவரி 30-31 ஆம் தேதி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி சேவைகள் தொடர்பாக ஏதேனும் பணிகள் இருந்தால் கட்டாயம் அதை ஜனவரி 30ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுங்கள். வங்கி ஊழியர்களின் 2 நாள் போராட்டம் காரணமாக ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி பணிகளை முடித்துக்கொள்வது சிறந்து.
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்கள் (யுஎஃப்பியு) இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இவ்விரு நாட்களில் வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் இந்தியா
எவ்வாறாயினும் ஸ்டேட் பாங்க் இந்தியா நிர்வாகம் நாடு முழுவதும் இருக்கும் அதன் கிளைகளில் வழக்கமான செயல்பாடுகளைத் தொடரவும், வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30 - 31
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) எங்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில் யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) தனது கிளை அமைப்புகளுக்கு ஜனவரி 30 - 31 ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பின் கீழ் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகியவை உள்ளது.
வேலை நிறுத்த போராட்டம்
மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் கோரிக்கையை ஏற்று 2023 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஒப்புதல் அளித்துள்ளது.
11வது சம்பள செட்டில்மென்ட்
ஜனவரி 15 ஆம் தேதி யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பு ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தனது உறுப்பினர்கள் அமைப்புகள் உடன் இணைந்து வங்கி ஊழியர்களுக்கான 11வது சம்பள செட்டில்மென்ட் மற்றும் இதர பல கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது.
எஸ்பிஐ அறிவிப்பு
இந்த முடிவில் இருந்து பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாத நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வங்கி கிளை சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவித்துள்ளது.
முக்கியக் கோரிக்கைகள்
UFBU அமைப்பு வங்கிகளுக்கு வாரம் ஐந்து நாள் வேலை, வங்கி ஊழியர்களுக்கு stagnation increment மற்றும் பதவி உயர்வு, சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற பல முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications