SBI வங்கி சேவை முடங்கியது.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி 13 மணிக்கு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்திர கணக்கு முடிக்கும் நடவடிக்கைகள் காரணமாக, ஏப்ரல் 1, 2024 அன்று பல்வேறு வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் இணைய வங்கி சேவை, யோனோ லைட் (Yono Lite) யோனோ பிஸ்னஸ் வெப் & மொபைல் ஆப் (Yono Business Web & Mobile App), யோனோ (YONO), யு.பி.ஐ (UPI) ஆகிய சேவைகள் ஏப்ரல் 1, 2024 அன்று காலை 12.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

SBI வங்கி சேவை முடங்கியது.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிதி பரிமாற்ற சேவைகளை யு.பி.ஐ லைட் (UPI Lite) மற்றும் ஏ.டி.எம் (ATM) சேவைகள் மூலம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த இரு சேவைகளும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இந்தியா முழுக்க இயங்கும் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ மட்டுமல்லாமல், ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. வருட இறுதி கணக்கு முடிக்கும் நடவடிக்கைகள் காரணமாக, ஏப்ரல் 1, 2024 அன்று தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (National Electronic Funds Transfer - NEFT) சேவையில் தாமதங்கள் ஏற்படலாம் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது

SBI வங்கி சேவை முடங்கியது.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
.

எனவே, ஏப்ரல் 1, 2024 அன்று காலை 12.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை எஸ்.பி.ஐ இணைய வங்கி சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே பணிகளை முடித்துக்கொள்வது அவசியம். மேலும், அவசர தேவைகளுக்கு யு.பி.ஐ லைட் அல்லது ஏ.டி.எம் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

யூபிஐ லைட் என்றால் என்ன?: குறைந்த தொகை பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக NPCI உருவாக்கிய ஒரு பொது பயன்பாடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் யூபிஐ பின் இல்லாமல் பேமெண்ட் செய்ய முடியும்.

யு.பி.ஐ. லைட் இயக்குவது எப்படி?:
படி 1: முதலில், உங்கள் யுபிஐ ஆப்-ஐ திறந்து கொள்ளுங்கள்.
படி 2: ஹோம் ஸ்கிரீனில், யுபிஐ லைட்-ஐ இயக்குவதற்கான ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
படி 3: யுபிஐ லைட் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
படி 4: யுபிஐ லைட்டில் சேர்க்க விரும்பும் தொகையை உள்ளிட்டு, பணம் எடுக்க வேண்டிய வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும்.
படி 5: உங்கள் யுபிஐ பின்னை உள்ளிடவும்.
படி 6: இதோடு யுபிஐ லைட் வெற்றிகரமாக இயக்கப்பட்டுவிட்டது!

யுபிஐ லைட் மூலம் பணம் செலுத்துவது எப்படி?:
படி 1: முதலில், உங்கள் யுபிஐ ஆப்-ஐ திறந்து கொள்ளுங்கள்.
படி 2: பணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
படி 3: செலுத்த வேண்டிய தொகையை உள்ளிடவும்.
படி 4: யுபிஐ பின் இல்லாமல் பணம் வெற்றிகரமாக அனுப்பப்படும்.

யுபிஐ லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.500 வரையிலான தொகைக்கு மட்டுமே யுபிஐ பின் தேவைப்படாது. ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+