எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. நாளை முதல் வட்டி குறைப்பு அமல்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு செய்த ஐந்து வட்டி குறைப்புகள் எப்படி வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது என்று பார்க்கலாம் என ரிசர்வ் வங்கி கடந்த முறை வட்டி குறைப்பு இல்லை என்று கூறியது.

இந்த நிலையில் நேற்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை.

எனினும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தற்போது வட்டி குறைப்பினை செய்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது சில கடன்களுக்கான வட்டி குறைப்பை செய்யும் என்றாலும், வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதிகளுக்கும் வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மோடி அரசின் பட்ஜெட் 2020ஐ பூஜ்ஜியம் என மதிப்பீடு.. ப சிதம்பரம் பகிரங்க கருத்து..!மோடி அரசின் பட்ஜெட் 2020ஐ பூஜ்ஜியம் என மதிப்பீடு.. ப சிதம்பரம் பகிரங்க கருத்து..!

எவ்வளவு வட்டி குறைப்பு

எவ்வளவு வட்டி குறைப்பு

எஸ்பிஐ அனைத்து முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதோடு வைப்பு நிதிக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் எஸ்பிஐ ஒன்பதாவது முறையாக வட்டி குறைப்பினை செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது வைப்பு நிதிகளுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது வாருங்கள் பார்க்கலாம்.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

இந்த வட்டி குறைப்பானது சில கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்றாலும், அதை ஈடுகட்ட வங்கி வைப்பு தொகை வட்டியிலும் குறைப்பு செய்துள்ளது. சொல்லப்போனால் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி குறைப்பு செய்யப்படவில்லை. தற்போது குறைக்கப்பட்டுள்ள இந்த புதிய வட்டி விகிதமானது பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்

7 முத 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.50%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%
இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5.50%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 5.50%
இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6%

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

7 முத 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5.50%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 6%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 6%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6.50%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6.50%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6.50%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI cuts FD rates, please check latest rates here

The country’s largest lender SBI said MCLR rate will be reduced by 5 basis points. and that's says new interest rates will take effect on coming February 10.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X