சொந்த வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உள்ள ஒரு முக்கிய கனவு. அது ஓலைக் குடிசையானாலும் சரி, மாடி வீடானாலும் சரி. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும்.
இப்படி பலரின் கனவையும் நனவாக்க உதவுவது வீட்டுக்கடன் தான். நம்மில் பலருக்கும் இது தான் வாழ் நாள் கனவாகவே இருக்கும். அப்படியான கனவு நிறைவேற, இது சரியான நேரம் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றாலே, அங்கு முதல் தடையாக நிற்பது நிதி பிரச்சனை தான். அந்த நிதி பிரச்சனையை தீர்க்க ஒரு வழி வீட்டுக் கடன். அப்படியான கடன், குறைவான வட்டியில் கிடைக்கிறது எனில் மறுக்க முடியுமா? நிச்சயம் நல்ல வாய்ப்பு தானே.
எஸ்பிஐ வட்டி குறைப்பு
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டியினை குறைத்துள்ளது. அது எவ்வளவு வட்டி? வேறு என்னென்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம். நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.
எவ்வளவு வட்டி குறைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 6.95%த்தில் இருந்து, 6.70% ஆக குறைந்துள்ளது. இதே பெண்களுக்கு கூடுதலாக 0.05% வட்டியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே யோனோ ஆப் வழியாக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக, 5 அடிப்படை புள்ளிகள் வட்டி சலுகை கிடைக்கும்.
இஎம்ஐ குறையும்
எஸ்பிஐ-யின் இந்த வட்டி குறைப்பினால் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு, மாத மாதம் செலுத்தும் தவணைத் தொகை குறையும். அதோடு புதிய வீடு கட்ட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். அதிலும் பெண் வாடிக்கையாளர் எனில், இன்னும் மாத தவணை தொகை குறையும். எனினும் இந்த வட்டி சலுகையானது அவரவர் சிபில்ஸ்கோரினை பொறுத்து இருக்கலாம்.
எவ்வளவு தொகை?
எஸ்பிஐ-யின் இந்த சலுகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் 6.7% ஆகவும், 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.95% ஆகவுன்ம். 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் பெறுவோருக்கு 7.05% ஆகவும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வட்டி விகிதமானது ஏற்றம் கண்ட நிலையில், இன்று மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அதிக வாடிக்கையாளர்கள்
எஸ்பிஐ-யில் ஹோம் லோன் வாடிக்கையாளார்களின் எண்ணிகையானது 5 லட்சங்களை கடந்துள்ள நிலையில், ஹோம் லோன் சந்தையில் 34% பங்கினைக் கொண்டுள்ளது. இதே வாகன கடன் சந்தையில் 33% பங்கினையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பானது பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனளிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications