இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கியின் சமீபத்திய 0.50 சதவீத ரெப்போ விகித குறைப்புக்கு இணையாக, கடனுக்கான வட்டி விகிதங்களை 0.50% வரை குறைப்பதாக அறிவித்ததுள்ளது.
இந்த மாற்றம், வீட்டு கடன்கள், MSME கடன்கள் உள்ளிட்ட ப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் அனைத்திற்கும் புதிய வட்டி விகிகம் ஜூன் 15, 2025 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் EBR, RLLR உடன் இணைக்கப்பட்ட கடன்களிலும் எதிரொலிக்கும். இந்த வட்டி குறைப்பு, கடன் வாங்கியோருக்கான EMI சுமையை பெரிய அளவில் குறைக்கும்.

EBR வட்டி குறைப்பு:
SBI வங்கி-யின் வெளிப்புற அளவுகோல் வட்டி விகிதம் (External Benchmark Rate - EBR), ஜூன் 15, 2025 முதல் 8.65% இலிருந்து 8.15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. EBR வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் மற்றும் வங்கி நிர்ணயிக்கும் ஸ்ப்ரெட் (spread) ஆகியவற்றால் கணக்கிடப்படுகிறது.
- ரெப்போ விகிதம்: 5.5%
- ஸ்ப்ரெட்: 2.65%
- EBR வட்டி விகிதம்: 5.5% + 2.65% = 8.15%
இந்த EBR வட்டி விகிதம் தான், எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) கடன்கள் போன்ற அனைத்து முக்கிய கடன்களுக்குமான வட்டியை நிர்ணயம் செய்யப்படுகிறது. EBR குறைவால், கடன் வாங்குவோரின் EMI தொகை குறையும்.
SBI-யின் EBR வட்டி குறைப்பு, புதிய மற்றும் ஏற்கனவே கடன் வங்கியவர்களுக்கும் நன்மை அளிக்கும். உதாரணமாக, ரூ.50 லட்சம் வீட்டு கடனுக்கு 0.50% வட்டி குறைப்பு, EMI தொகையில் சுமார் ரூ.2,000-ரூ.3,000 வரை குறைக்கலாம், இது கடன் காலத்தை பொறுத்து ஒவ்வொருக்கும் மாறும்.
SBI வீட்டு கடன் வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வீட்டு கடன் வட்டி விகிதங்கள், ஒருவரின் CIBIL ஸ்கோர், கடன் தொகை, மற்றும் கால அளவை பொறுத்து மாறுபடுகின்றன. அனைத்து SBI வீட்டு கடன்களும் EBLR உடன் இணைக்கப்பட்டுள்ளன, இது தற்போது 8.15% ஆக உள்ளது. இந்த நிலையில் ஜூன் 15, 2025 முதல் எஸ்பிஐ வங்கியின் புதிய பொருந்தும் விகிதங்கள் இதுதான்.
- வழக்கமான வீட்டு கடன்: 7.50% முதல் 8.45% வரை.
- Maxgain OD (Overdraft) வீட்டு கடன்: 7.75% முதல் 8.70% வரை.
- டாப்-அப் வீட்டு கடன்: 8.00% முதல் 10.50% வரை.
MCLR விகிதங்கள்:
SBI-யின் MCLR அடிப்படையிலான வட்டி விகிதம் ஜூன் 14, 2025 நிலவரப்படி மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் தற்போது இருக்கும் அதே வட்டி விகிதம் ஜூன் 15ஆம் தேதிக்கு பின்பும் தொடர உள்ளது.
- ஓவர்நைட் மற்றும் ஒரு மாதம்: 8.20%
- மூன்று மாதம்: 8.55%
- ஆறு மாதம்: 8.90%
- ஒரு வருடம்: 9.00%
- இரண்டு வருடம்: 9.05%
- மூன்று வருடம்: 9.10%
MCLR, தனிநபர் கடன்கள், வாகன கடன்கள், மற்றும் சில நிலையான வட்டி விகித கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. EBR குறைந்தாலும், MCLR மாறாமல் இருப்பது, இந்த கடன்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது.


Click it and Unblock the Notifications