எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. இதோ..!

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? அது வட்டி குறைப்பு தான். இனி நீங்கள் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ சற்று குறையுமே.

எஸ்பிஐ அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வட்டி குறைப்பை அறிவித்து வருகிறது. சொல்லப்போனால் நடப்பு நிதியாண்டில் இது 10 முறையாகும்.

கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்

கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்

ஒரு புறம் நிலவி வரும் மந்த நிலை காரணமாகவும், கொரோனா பயம் காரணமாகவும் பொருளாதாரம் என்னவாகுமோ? வட்டி குறைப்பை செய்யலாமா என பல நாடுகளும் யோசித்து வரும் நிலையில், அதை செய்தே காட்டியுள்ளது எஸ்பிஐ. இந்த வட்டி குறைப்பானது சில கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைப்பு நிதிக்கும் வட்டி குறைப்பு

வைப்பு நிதிக்கும் வட்டி குறைப்பு

எனினும் அதே நேரத்தில் வங்கி வைப்பு நிதிகளுக்கும் வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது மார்ச் 10 முதலே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து 7.75% ஆக குறைத்துள்ளது. இது முன்பு 7.85% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு வட்டி குறைப்பு?

எவ்வளவு வட்டி குறைப்பு?

ஓவர் நைட் விகிதம் முன்பு 7.60% புதிய விகிதம் 7.45
ஒரு மாதம் 7.60% 7.45%
மூன்று மாதம் 7.65% 7.50%
ஆறு மாதம் 7.80% 7.70%
ஒரு வருடம் 7.85% 7.75%
இரண்டு வருடம் 8.05% 7.95%
மூன்று வருடம் 8.15% 8.05%

பொது மக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

பொது மக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4%


46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%


இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5.50%


211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 5.50%


இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.9%


2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.9%


3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.9%


5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 5.9%

மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.5%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5.5%
இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 6%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 6%
இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6.4%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6.4%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6.4%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6.4%

வட்டி குறையுமே

வட்டி குறையுமே

இந்த வட்டி குறைப்பான கடன் வாங்கியவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் வீட்டுக்கடன் உள்ளிட்ட பல கடன் களுக்கு வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது வைப்பு நிதியாளர்களிடையே சற்று ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+