இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான வங்கி விகிதங்களை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பெரும்பாலான கடன் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான ஈஎம்ஐ தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
எஸ்பிஐ வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முக்கியமான காரணம் ஆர்பிஐ தான், டிசம்பர் மாத துவக்கத்தில் ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவில் ரெப்போ விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தியது, இதைத் தொடர்ந்து தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா டிசம்பர் 15, 2022 முதல் தனது கடனுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பென்ச்மார்க் லென்டிங் ரேட் இணைக்கப்பட்ட அனைத்து வகையாகக் கடன்களுக்கும், அனைத்து காலக்கட்ட கடன்களுக்கும் 35 அடிப்படை புள்ளிகளும், MCLR வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்கள் அனைத்தையும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
MCLR வட்டி விகிதம்
உதாரணமாக ஒருமாத கடனுக்கான MCLR வட்டி விகிதம் 7.75 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.00 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு வருட கடனுக்கான MCLR வட்டி விகிதம் 8.05 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 3 வருட கடனுக்கான MCLR வட்டி விகிதம் 8.35 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முக்கிய வங்கிகள்
டிசம்பர் 01, 2022 முதல் நாட்டின் முக்கிய வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அனைத்துத் தவணைக் காலங்களிலும் எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ எம்சிஎல்ஆர் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ள நிலையில், பிஎன்பி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 5 மற்றும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளன.
ஆர்பிஐ
டிசம்பர் 5 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
5 முறை வட்டி உயர்வு
இதேபோல் SDF விகிதம் 6 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.5 சதவீதமாக உயர்த்துவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் மட்டும் 5 முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
பர்ஸ் ஓட்டை
ஆர்பிஐ 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்திய வரையில் வங்கிகள் வாடிக்கையாளரின் கடனின் காலத்தை மட்டுமே உயர்த்தி வந்தது, ஆனால் 5வது வட்டி விகித உயர்வு அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி அறிவித்த வட்டி விகித உயர்வு மூலம் ஈஎம்ஐ தொகையை அதிகரிக்க உள்ளது. இது மக்களின் பர்ஸ்-ஐ பெரிய அளவில் ஓட்டையாக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications