இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த காலாண்டில் 18,643 கோடி லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும்.
2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான நிதி முடிவுகளை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் என்பது 2.7 சதவீதமாக அதிகரித்து 42,775 கோடி ரூபாயாக இருக்கிறது. அதாவது நிறுவனத்திற்கு கிடைத்த வட்டி வருமானம் மற்றும் நிறுவனம் செலுத்திய வட்டி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் தான் இந்த வருமானம்.

அதே வேளையில் எஸ்பிஐ நிறுவனத்தின் நிகர வட்டி மார்ஜின் என்பது நிலையாக 3.15 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஒரு வங்கியின் லாபத்தை கணக்கிடுவதற்கான முக்கியமான ஒரு குறியீடு இதுவாகும். அந்த வகையில் எஸ்பிஐ நிறுவனத்தின் லாபம் நிலையானதாகவே இருக்கிறது.
அதேவேளையில் நான்காவது காலாண்டில் எஸ்பிஐ நிறுவனத்தில் வழங்கிய கடன்களின் அளவு 12 சதவீதமாகவும், வங்கி பெற்ற டெபாசிட்களின் அளவு 9.5% ஆகவும் உயர்ந்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ நிறுவனம் கடன் வழங்கிய அளவு 42.21 லட்சம் கோடி ரூபாயாகவும் டெபாசிட் பெற்ற பணத்தின் மதிப்பு 53.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்ட எஸ்பிஐ தங்களின் முதலீட்டாளர்களுக்கு நற்செய்தியையும் வழங்கியுள்ளது. இதன்படி எஸ்பிஐ நிறுவன பங்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஒரு பங்கிற்கு 15.90 ரூபாய் ஈவு தொகையாக வழங்குவது என முடிவெடுத்திருக்கிறது. ஒரு ரூபாய் முக மதிப்பு கொண்டு பங்கிற்கு 1590 சதவீதம் அதாவது 15.90 ரூபாய் ஈவுத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈவுத்தொகை வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதியாக மே 16ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மே 30ஆம் தேதி இந்த தொகை கணக்கில் வைக்கப்படும்.
வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையில் எஸ்பிஐ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1.5% உயர்ந்து 800 ரூபாய் என்று அளவில் வர்த்தகமானது. இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமாக எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எஸ்பிஐ qualified institution placement அல்லது follow on public offer முறையில் 25,000 கோடிகள் வரை திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications