நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அரசுக்கு சொந்தமான மகாநகர் டெலிகாம் நிகாம் (MTNL) நிறுவனத்தை வராக்கடன் ஆக (NPA) அறிவித்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் எம்டிஎன்எல் ஆனது என்பிஏ ஆக அறிவிக்கப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, செப்டம்பர் 30ஆம் தேதியன்று எம்டிஎன்எல்லின் மொத்த நிலுவைத் தொகை ரூ. 325.52 கோடி ஆகும். இதில் ரூ. 281.62 கோடிகள் நிலுவையில் உள்ளதால், அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதன் கணக்குகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த தொகையை நிறுவனம் செலுத்த தவறினால், நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதே போன்று கடந்த காலங்களில், எம்டிஎன்எல் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் அதாவது செப்டம்பரில், பஞ்சாப் நேஷனல் வங்கியும் எம்டிஎன்எல் ஐ என்பிஏ ஆக அறிவித்தது. மேலும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டும் இந்த நிறுவனத்தை என்பிஏ ஆக அறிவித்துள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஏற்கனவே எம்டிஎன்எல் தொடர்பான அனைத்து கணக்குகளையும் முடக்கியுள்ளது. ஆகஸ்ட் 30, 2024 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ. 31,944.51 கோடி ஆகும். இதுகுறித்து நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ரூ. 422.05 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என்பது குறித்து பங்குச் சந்தைகளுக்கு தகவல் தெரிவித்தது
இந்த ரூ. 422.05 கோடியில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 155.76 கோடிகள், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 40.33 கோடி, பஞ்சாப் & சிந்து வங்கிக்கு ரூ. 40.01 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 41.54 கோடி, யூகோ வங்கிக்கு ரூ. 4.04 கோடி நிலுவையில் வைத்துள்ளது.
இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களிலிருந்து வரும் வட்டியை ஈடுகட்ட எம்டிஎன்எல் ரூ.1,151.65 கோடியை அரசிடம் கோரியுள்ளது. எனவே, பட்ஜெட்டில், எம்டிஎன்எல் பத்திரங்களின் அசல் தொகையை செலுத்துவதற்காக, 3,668.97 கோடி ரூபாயை நிதி அமைச்சகம் ஒதுக்கியது.
எஸ்பிஐ தனது கடிதத்தில், எம்டிஎன்எல்இன் நிலப் பணமாக்குதல் திட்டத்தில், பணமாக்குதலின் மூலம் கிடைக்கும் வருமானம் நிலுவைத் தொகையைத் தீர்க்கப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய விவரங்களையும் எம்டிஎன்எல்லிடம் எஸ்பிஐ கோரியுள்ளது.
புது டெல்லியில் உள்ள பங்கா சாலையில் 13.88 ஏக்கர் நிலத்தை உருவாக்க என்பிசிசியுடன் எம்டிஎன்எல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களைக் கோரியுள்ளது. இது நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க பயன்படுத்தலாம் என்றும் கேட்டுகொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications