எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை மாலையில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாகத் தற்காலிகமாக முடக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

செம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. ! செம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. !

இக்காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் முன்கூட்டிய திட்டமிட்டு வங்கி பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

கடந்த மாதம் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் சேவை தளங்களான யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை அனைத்தும் மெயின்டெனன்ஸ் பணிகாரணமாக முடங்கியது மறக்க முடியாது.

எஸ்பிஐ டிவிட்டர் பதிவு

எஸ்பிஐ டிவிட்டர் பதிவு

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7ஆம் தேதி 22.15 முதல் மே 8 1.45 மணி வரையில் மெயின்டெனன்ஸ் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இக்குறிப்பிட்ட காலத்தில் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகிய அனைத்தும் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி நெட்வொர்க்
 

எஸ்பிஐ வங்கி நெட்வொர்க்

இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி நெட்வொர்க் வைத்துள்ளது எஸ்பிஐ தான், நாடு முழுவதும் சுமார் 22,000 வங்கி கிளைகள் மட்டும் அல்லாமல் மக்களின் பணப்புழக்கத்திற்கு ஏதுவாக 57,889 ஏடிஎம் இயந்திரங்களையும் வைத்து நிர்வாகம் செய்து வருகிறது எஸ்பிஐ.

இண்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்

இண்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்

இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியில் சுமார் 85 மில்லியன் இண்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்களும், 19 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும், 135 மில்லியன் யூபிஐ சேவை பயன்பாட்டாளர்களும் உள்ளனர்.

டிஜிட்டல் வங்கி சேவை தளம்

டிஜிட்டல் வங்கி சேவை தளம்

இவ்வளவு பெரிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சமாளிக்க அவ்வப்போது சர்வர் மற்றும் இதர டிஜிட்டல் தளத்தில் மெயின்டெனன்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் தளத்தில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வருவது அனைவரும் அறிந்ததே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI digital services unavailable due to maintenance on May 7, 10.00PM

SBI digital services unavailable due to maintenance on May 7, 10.00PM
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X