இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவு தளர்வு அளிக்கப்பட்ட காரணத்தால் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் பல மாதங்களுக்குப் பின் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
இந்தக் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் 2020ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட -23.9 சதவீத வீழ்ச்சியில் இருந்து 2வது காலாண்டில் கணிசமான உயர்வை அடைந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -12.5 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடையும் என எஸ்பிஐ முன்பு அறிவித்த நிலையில் தற்போது -10.7 சதவீதம் வரையில் மட்டுமே வீழ்ச்சி அடைந்தும் என் எஸ்பிஐ ECOWRAP வெள்ளிக்கிழமை தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ பொருளாதார ஆலோசகர்
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் தொழிற்துறை, சேவைத்துறை மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் அடிப்படையில் 41 high-frequency indicator-களை அடிப்படையாக வைத்து Nowcasting முறையில் ஆய்வு செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் -10.7 சதவீதம் வரையில் மட்டுமே சரிந்திருக்கும். முன்பு 12.5 சதவீதமாகக் கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
என எஸ்பிஐ வங்கி தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கான்டி கோஷ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
50 சதவீத வளர்ச்சி
இந்தியப் பொருளாதாரம் 2020-21 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் ஏற்பட்ட -23.9 சதவீத வீழ்ச்சியில் 50 சதவீதம் முன்னேறி 2வது காலாண்டில் -10.7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரம் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
வர்த்தகச் சந்தை
செப்டம்பர் மாதம் நாட்டின் தொழிற்துறை உற்பத்தியும், சேவைத் துறையின் வர்த்தகமும் சிறப்பாக இருந்த காரணத்தால் இக்காலாண்டில் 50 சதவீத வளர்ச்சியில் உள்ளது.
இதுவே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து நாட்டின் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைந்திருந்தால் தற்போது இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையை அடைந்திருக்கும்.
அதிகப் பாதிப்பு
எஸ்பிஐ ECOWRAP தனது ஆய்வறிக்கையில், இந்தக் கொரோனா பாதிப்புக் காலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டது சுறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் என விளக்கமாகத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி high-frequency data-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்து முதல் முறையாக வெளியிட்டுள்ள 'Nowcast'அறிக்கையில், செப்டம்பர் மாதம் நாட்டின் பொருளாதாரம் -8.6% வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் கடந்த வாரம் தெரிவித்தது.
ரெசிஷன்
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்த நிலையில், தொடர்ச்சியாக 2 காலாண்டுகளாகப் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகல் இந்தியப் பொருளாதாரம் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது.
செப்டம்பர் காலாண்டின் பொருளாதாரத் தரவுகளை மத்திய அரசு வருகிற நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும்.
சரிவு பாதையில் இந்தியப் பொருளாதாரம்
இந்த ஆய்வறிக்கையில் இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியின் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரம் technical recessionனுக்கு நுழைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது என்பது பொருள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications