GDP.. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் -7.4%... எஸ்பிஐ மதிப்பீடு..!

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பற்றிய பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், எஸ்பிஐ தனது மதிப்பீட்டினை மாற்றியமைத்துள்ளது.

இது உண்மையில் மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது இந்தியா வளர்ச்சி பாதையினை நோக்கி சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.

ஏனெனில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதமானது -7.4% வீழ்ச்சியடையலாம் என கணித்துள்ளது. சரியலாம் என்று தானே கணித்துள்ளது. இதில் என்ன நல்ல விஷயம் இருக்கு என்று கேட்பது புரிகிறது.

எஸ்பிஐ கணிப்பு என்ன?

எஸ்பிஐ கணிப்பு என்ன?

எஸ்பிஐ முன்னதாக இந்த ஜிடிபி விகித்தினை -10.9% சரியும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக கிட்டதட்ட 11% சரியலாம் என கணித்திருந்த நிலையில் தற்போது -7.4% சரியும் என்பது நல்ல விஷயம் தானே. அப்படியெனில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என்பது தானே உண்மை. உண்மையில் இந்தியா வளர்ச்சி பாதையில் தான் சென்று கொண்டுள்ளது. ஆனால் சற்றே மெதுவான வேகத்தில் சென்று கொண்டுள்ளது.

மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி எப்படி இருக்கும்?

மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி எப்படி இருக்கும்?

இது மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 0.1% இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதொடு நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் எதிர்பார்ப்பினை விட சிறப்பாக மீண்டு வருகிறது என்றும், இதனால் ஜிடிபி விகிதத்தினையும் மாற்றியமைத்துள்ளது. திருத்தப்பட்ட இந்த ஜிடிபி விகிதங்கள், தொழில்துறை செயல்பாடுகள், சேவை செயல்பாடு மற்றும் உலகளாவிய பொருளாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

நேர்மறையான வளர்ச்சி விகிதம்

நேர்மறையான வளர்ச்சி விகிதம்

இந்த குறிகாட்டிகளில் பொருளாதார வளர்ச்சி குறித்தான குறிகாட்டிகள் நேர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. ஒன்று ஆடிஓ பரிவர்த்தனை, வரி வசூல், சுங்க சாவடிகள், சரக்கு போக்குவரத்து, வாராந்திர உணவு வருகை, பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு ஆகியவை நவம்பரில் அதிகரித்துள்ளன. இன்னும் சில குறியீடுகள் தீபாவளி வாரத்தில் ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு வேகத்தை மேம்படுத்துவதை காட்டுகிறது என்று எஸ்பிஐ ஆராய்ச்சி காட்டுகிறது.

2022ல் எப்படியிருக்கும்?

2022ல் எப்படியிருக்கும்?

இதன் விளைவுகளின் காரணமாக 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. எஸ்பிஐ மட்டும் அல்ல பல ஆய்வறிக்கைகளும் தற்போது இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை திருத்தி வருகின்றன. ஆக இதெல்லாம் இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதற்கான சாட்சியமே. உண்மையில் இது நல்ல விஷயம் தான்.. உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+