இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று ஜிடிபி வெளியீடு. கொரோனாவினால் பல முக்கிய துறைகளும் பெருத்த அடி வாங்கியுள்ள நிலையில், முதல் காலாண்டிலேயே 40 வருடங்களில் இல்லாத அளவு வீழ்ச்சியினை கண்டது.
இதற்கிடையில் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பதற்றமான நிலையும் நிலவி வருகின்றது.
அதிலும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் ஜிடிபி குறித்தான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ-யும் தன் பங்குக்கு கணித்துள்ளது. சரி என்ன தான் சொல்கிறது எஸ்பிஐ வாருங்கள் பார்க்கலாம்.
எஸ்பிஐ கணிப்பு
இன்று வெளியாகவிருக்கும் ஜிடிபி மதிப்பு குறித்தான பல்வேறு கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான எஸ்பிஐ-யின் கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -10.7 சதவீதம் வீழ்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னர் -12.5 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்
இது வளர்ச்சி கண்டு வருவதற்கான அறிகுறிகளை காட்டினாலும், இன்னும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. அதே போல் தொழில்துறை வளர்ச்சி குறித்தான குறியீட்டினையும் சற்று மாற்றியமைத்துள்ளது. ஆக இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு மெதுவாக மீண்டு வருவதனையே காண முடிகிறது.
Sbi Composite Index விகிதம்
Sbi Composite Index recovers என்ற தலைப்பில் வெளியான இந்த மதிப்பீட்டில் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் 1.08 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். அதே போல இரண்டாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் - 10.7 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் நேர்மறையான கணிப்பினை வெளியிட்டுள்ளது. நவம்பரில் ஜிஎஸ்சி வசூலானது அக்டோபர் மாதத்தினை விட சற்று அதே அளவாக இருக்கும். இந்த விகிதம் ஜனவரி 2020ல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மேற்கண்ட கணிப்புகள் மைனஸில் இருந்தாலும் கூட, முன்பை விட, வளர்ச்சி பாதையில் உள்ளது கவனிக்கதக்கது.
முதல் காலாண்டு வளர்ச்சி
அதிலும் முதல் காலாண்டில் கண்ட 23.9 சதவீதம் வீழ்ச்சிக்கு மத்தியில், இது பாதிக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுவதே ஒரு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐயின் இந்த Sbi Composite Index குறியீடு நவம்பரில், 19 மாதங்களில் இல்லாத உச்சத்தினை தொட்டுள்ளது. இது கடந்த அக்டோபரில் 53 சதவீதமாகவும், இதே நவம்பர் 2019ல் 50.8 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications