இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தில், ஒருமனதாக ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆக நிர்ணயித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார்.
இந்த வட்டி விகித குறைப்பு பல்வேறு வகையான கடன்களைப் பெற்றிருப்பவர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்பை வழங்கினாலும், வங்கி வைப்பு நிதியை முக்கிய வருமானமாகவும், முதலீட்டு முறையாகவும் கொண்ட பல கோடி மக்களுக்கு இந்த முடிவு பெரும் இழப்பாக இருக்கும்.

இந்த வட்டி விகித குறைப்பு வங்கி வைப்பு நிதியில் இருந்து வரும் வருமானத்தை குறைக்கும். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வங்கி வைப்பு நிதியின் மூலம் பெரும் வருமானத்தை நம்பி உள்ளனர். அவர்களுக்கு இது ஒரு பாதகமான நிலையாகும். மேலும், இந்த வட்டி விகித குறைப்பினால், வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை பல வங்கிகள் குறைத்து வருகின்றன. தற்போது இதில் எஸ்பிஐ வங்கியும் இணைந்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), குறிப்பிட்ட நிலையான வைப்பு நிதி (எஃப்டி) கணக்குகளுக்கான வட்டி விகித்தில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித மாற்றங்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
எஸ்பிஐ அனைத்து காலக்கட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றவில்லை, 2 முக்கிய காலக்கட்டத்திற்கான வட்டி விகிதத்தை மட்டுமே மாற்றியுள்ளது. அந்த வகையில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட எஃப்டிகளுக்கு பொருந்தும் வட்டி விகிதங்களில் 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பை வங்கி செயல்படுத்தியுள்ளது.
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்ட நிலையான வைப்பு நிதிகளுக்கு, பொது மக்களுக்கான வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கான விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை முதர்வு காலம் கொண்ட நிலையான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் பொது மக்களுக்கான 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான 7.5 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கி இந்த வட்டி விகித மாற்ற அறிவிப்புடன் தனது சிறப்பு வைப்பு நிதி திட்டமான 'அம்ரித் வ்ரிஷ்டி'யை திருத்தப்பட்ட வட்டி விகிதத்துடன் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த 444 நாள் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு முறையே 7.55 சதவீதம் மற்றும் 7.65 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் முதலில் 2024 ஜூலையில் அறிமுகம் செய்த போது பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்திலும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்திலும் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது 7.05 சதவீதமாக குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முடிவு பொருளாதார வளர்ச்சிக்கு உதவினாலும் வங்கி வைப்பு நிதியை நம்பி இருக்கும் மக்களின் வருமானத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications