மாஸ் காட்டிய SBI Funds ஐபிஓ.. முதல் நாளிலேயே 7 சதவீதம் லாபம்.. முதலீட்டாளர்கள செம ஹேப்பி!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் எஸ்பிஐ-யின் மியூச்சுவல் பண்ட் பிரிவின் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜராக இருக்கும் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஐபிஓ வெற்றிகரமாக முடிந்து இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நிர்வாகம் செய்யும் இந்நிறுவனத்தின் பங்குகள் என்எஸ்ஈ, பிஎஸ்ஈ-யில் சுமார் 7 சதவீதம் வரையிலான ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

மாஸ் காட்டிய SBI Funds ஐபிஓ.. முதல் நாளிலேயே 7 சதவீதம் லாபம்.. முதலீட்டாளர்கள செம ஹேப்பி!

இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்ஈ சந்தையில் அதன் ஐபிஓ வெளியிட்டு விலையான 574 ரூபாயை ஒப்பிடுகையில் சுமார் 6.27 சதவீதம் அதிக விலையில் அதாவது 610 ரூபாய் அளவில் பட்டியலிடப்பட்டது. இதேபோல் என்எஸ்ஈ சந்தையில் 613.30 ரூபாய் என்ற 6.85 சதவீத அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டது.

சுமார் 9813 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஐபிஓவுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்த நிலையில் க்ரே மார்கெட்டில் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவன பங்குகள் 97 ரூபாய் ப்ரீமியம் விலையில் வர்த்தகமானது, இதன் மூலம் இப்பங்குகள் 16.9 சதவீதம் ப்ரீமியம் விலையில் இன்றுவபட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 சதவீத ப்ரீயமியமில் சந்தையில் அறிமுகமானது.

ஜூலை 14ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஓ-வுக்கு சுமார் 41.66 மடங்கு அதிக முதலீடுகள் குவிந்தது. முக்கியமான நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட சுமார் 140.11 மடங்கு அதிக தொகைக்கு முதலீட்டு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 22.51 மடங்கும், ரீடைல் முதலீட்டாளர்கள் 3.6 மடங்கு அதிக முதலீட்டு விருப்பத்தையும் கோரியிருந்ததன் விளைவு தான் கிரே மார்கெட்டிலும், இன்று பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் சுமார் 128 முதலீட்டு திட்டங்களை நிர்வாகம் செய்கிறது மட்டும் அல்லாமல் காலாண்டி அடிப்படையிலான சராசரி AUM அளவில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக சுமார் 12.5 லட்சம் கோடி முதலீட்டை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தை எஸ்பிஐ வங்கி மற்றும் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான Amundi இணைந்து நிர்வாகம் செய்கிறது. எஸ்பிஐ தனது ரீடைல் வங்கி கிளைகள் கொண்டு தனது மியூச்சுவல் பண்ட் முதலீட்டு வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.

தற்போகு சுமார் 1.32 லட்சம் மியூச்சுவல் பண்ட் டிர்ஸ்ட்ரிபியூட்டர்ஸ் உடன் நாட்டின் 98.2 சதவீத பின்கோடுகளில் இயங்கி வருகிறது. இந்த மாபெரும் நெட்வொர்க் மூலம் கிராமபுற வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகிறது எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+